-5 %
SM - G615F - என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்
லக்ஷ்மி சிவக்குமார் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எதிர் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
என்னைப் பற்றிச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுங்கள். சுருக்கமாக என்றால்... அடுத்த வாக்கியத்தில் முடிந்துவிடும். ‘நானொரு மறு விற்பனைச் சந்தையில் யாருக்கோ விலை போகக்காத்திருந்தேன்’ SM - G615F என்கிற பிரத்தியேக அடையாளத்துடன் வடிவமைக்கப்பட்ட என்னை இவன் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தினால்தான் சில ஆயிரங்கள் கொடுத்து வாங்கினான். தினமும் இவன் வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரயில் நிலையத்திற்குச் சென்று நாலரைக்குக் கிளம்பக்கூடிய ரயிலைப் பிடிக்கவேண்டும். அங்கிருந்து அறுபத்து நான்கு கிலோ மீட்டரில் இவனுடைய பணிமனை இருக்கிறது. அந்தப் பணிமனையின் அலுவலகத்தில் இவனை நேசித்தவளுடனான ஒரு கைவிடப்பட்ட ரயில் நிலையத்தில் திட்டமிடப்பட்ட சந்திப்பிற்குப் பின்னர், வீடு நோக்கித் திரும்புகையில், பிரிக்கவே கூடாதென இவனுடைய கையில் திணித்த புதையலுக்குள், தன்னுடைய பிறந்த நாளான செப்டம்பர்-19-ம் தேதியன்று பூர்வீகம் உறுதி செய்யப்படாத தெருநாய் என்கிற பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த முசுமுசுத்தக்குட்டி இருப்பதற்கான சந்தர்ப்பங்களில்லை. பிறகு, அதே தேதியில் திட்டமிடப் பட்டத் தங்களுக்கானப் பதிவுத் திருமணத்தன்று அந்த அலுவலகத்தில் இவனைக் கைவிட்டுப் போனவளுக்கும், இவனது திருமணத்திற்குப் பின்னராகக் கைவிட்டுப் போனவளுக்கும், ஒரு தொடர்பும் கிடையாது. மேலும், செளபர்ணிகா தேடக்கூடிய முகமறியாத பாவெல் என்பவனுக்கும் இவனுக்கும்கூட ஒரு தொடர்பும் கிடையாது. அப்படி இருக்கலாமென நான் உங்களைக் குழப்புவதாகக் கருதினால் அதில் உண்மையும் இருக்கக்கூடும்.
Book Details | |
Book Title | SM - G615F - என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள் (sm-g615f) |
Author | லக்ஷ்மி சிவக்குமார் (Lakshmi Sivakkumaar) |
Publisher | எதிர் வெளியீடு (Ethir Veliyeedu) |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Science | அறிவியல், 2023 New Arrivals |