-5 %
Out Of Stock
வரலாறு என்னை விடுதலை செய்யும்
₹95
₹100
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
"வரலாறு என்னை விடுதலை செய்யும்" - தீர்க்கதரிசனமான இந்த வார்த்தைகளை ஃபிடல் காஸ்ட்ரோ உதிர்த்தபோது, 1953-ல் மன்கடா படைத்தளத்துக்கு எதிரான தாக்குதலில் தோல்வியடைந்ததன் காரணமாக தேசத் துரோகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணையின்போது தன் தரப்பை நீண்ட வாதமாக முன்வைத்தார். வாதத்தின் இறுதியில் அவர் உதிர்த்த வார்த்தைகளே மேற்கண்டவை. வழக்கில் 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் எதிர்ப்பால் இரண்டே ஆண்டுகளில் விடுதலையானார். மெக்ஸிகோ சென்று ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் புரட்சிப் படையைத் தயார் செய்துகொண்டு கியூப அரசு மீது தாக்குதல் தொடுத்தார். ஃபிடல் வென்றார். மக்கள் அவர் பக்கம் நின்றனர். மக்களின் விடுதலைக்காக உளப்பூர்வமாகவும் மனஉறுதியுடனும் போராடும் ஒருவரால் மட்டுமே ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்ற வார்த்தைகளைச் சொல்ல முடியும். புகழ்பெற்ற இந்த உரையை 1983-லேயே மொழிபெயர்த்து வெளியிட்டவர் வீ.பா. கணேசன். காஸ்ட்ரோவின் மறைவையடுத்து ஒன்பது முறையாக மறுபதிப்பு காணும் இந்தப் புத்தகத்தில் காஸ்ட்ரோவின் கால வரிசை வாழ்க்கைக் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது சிறப்பு. உலக அரசியல்-பொருளாதார ஏகாதிபத்தியங்களின் தலைவனாய் செயல்படும் அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் நிலைபெற்று, அதன் அச்சுறுத்தல்களை துச்சமென தூக்கியெறிந்த சின்னஞ்சிறு கியூபாவின் வரலாற்றை மாற்றி எழுதியவர் தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ. லத்தீன் அமெரிக்காவின் கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தவர். பல நூற்றாண்டுகால ஸ்பானிய, அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக, கொடுங்கோலன் பாடிஸ்டாவிற்கு எதிராக இளைஞர் படைத் தலைவராய் 1953இல் நீதிமன்றக் கூண்டில் நின்றபடி “வரலாறு என்னை விடுதலை செய்யும்!” என அவர் எழுப்பிய கலகக் குரல் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல; உலக மக்கள் அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் இந்த எழுச்சியுரை இப்போது தோழர் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கான ஓர் அஞ்சலியாய் வெளிவருகிறது.
Book Details | |
Book Title | வரலாறு என்னை விடுதலை செய்யும் (Varalaaru Ennai Viduthalai Seyyum) |
Author | ஃபிடல் காஸ்ட்ரோ (Fidel Castro) |
Translator | வீ.பா.கணேசன் (V.P.Ganeshan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |