Menu
Your Cart

ஜெருசலேம்- உலகத்தின் வரலாறு(கட்டுரை)

ஜெருசலேம்- உலகத்தின் வரலாறு(கட்டுரை)
-5 % Out Of Stock
ஜெருசலேம்- உலகத்தின் வரலாறு(கட்டுரை)
₹760
₹800
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு (கட்டுரை) - சைமன் சிபாக் மாண்ட்டிஃபையர்:

ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ இருக்கும் இந்தச் சிறிய நகரம் புனித நகரமானது எப்படி? உலகின் மையமாகக் கருதப்படுவது ஏன்? இன்று மத்திய கிழக்கின் அமைதிக்கான திறவுகோலானது எப்படி?

போர்கள், காதல் களியாட்டங்கள், மன்னர்கள், பேரரசிகள், தீர்க்கதரிசிகள், கவிஞர்கள், துறவிகள், வெற்றியாளர்கள் மற்றும் விலைமகளிர் ஆகியோரின் வியப்புமிகு செய்திகளின் ஊடே என்றென்றும் மாறிவரும் இந்த நகரின் கதையைப் புதிய ஆவணங்களின் வழியாகத் தனது வாழ்வை அர்ப்பணித்து எழுதியிருக்கிறார் மாண்ட்டிஃபையர்.

ஜெருசலேமை ஆக்கியவர்களும் அழித்தவர்களும் இந்த மன்னர்களும் வெற்றியாளர்களும் துறவிகளும் தீர் க்கதரிசிகளும்தான்; இவர்களே இந்த நகரின் வரலாற்றைப் பதிவு செய்தவர்கள்; இந்த நகர் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் இவர்களே.

மன்னர் டேவிட்டிலிருந்து பராக் ஒபாமா வரையிலும், யூத கிறித்துவ இஸ்லாமிய மதங்களின் துவக்கத்திலிருந்து இன்றைய இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை வரையிலும் பேசுகிறது இந்த நூல்.

3000 ஆண்டு கால நம்பிக்கைகள், படுகொலைகள், மதவெறி, மத இணக்கம் ஆகிய எல்லாம் நிறைந்த ஒரு காவிய வரலாறு. இப்படித்தான் ஜெருசலேம் தன்னை ஜெருசலேமாக நிலை-நிறுத்திக் கொண்டிருக்கிறது. மண்ணிலும் விண்ணிலும் வாழும் ஒரே நகரம் ஜெருசலேம்.

Book Details
Book Title ஜெருசலேம்- உலகத்தின் வரலாறு(கட்டுரை) (Gerusalem)
Author சைமன் சிபாக் மாண்ட்டிஃபையர் (Saiman)
Translator சந்தியா நடராஜன் (Sandhiyaa Nataraajan)
ISBN 9789384915070
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 860
Published On Dec 2013
Year 2017
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Religion | மதம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha