Menu
Your Cart

காந்தியின் தாடை

காந்தியின் தாடை
-5 %
காந்தியின் தாடை
கணேசகுமாரன் (ஆசிரியர்)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள், பலராலும் அதிகம் கண்டுகொள்ளப்படாத மனிதர்களின் அறியாத அந்தரங்கப் பக்கங்களைப் பேசுகின்றன. அப்படித்தான் இத்தொகுப்பில் ஒரு ரயில் பைலட் சில தற்கொலைகளுக்கும் கொலைகளுக்கும் சாட்சியாகிப் போகிறார். ஏமாற்றிய கடவுளைக் கொலைகாரனாக்கி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார் மனநலம் பிறழ்ந்த ஒருவர். காலில் கட்டப்பட்ட சங்கிலியை அறுத்து எறிய முடியாமல் ஊமத்தம் பூக்களைக் கையிலேந்தியபடி மழையில் தொலைகின்றன சில பித்து மனங்கள். காதலிகளின் திருமணத்துக்குத் தயாரான பரிசுப் பொருட்கள் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கின்றன எழுதப்படாமல் மிச்சமிருக்கும் டைரியின் பக்கங்களில். துதிக்கை உயர்த்தி யாசிக்கும் உலகின் கடைசி யானையின் விழி ஓரத்தில் மன்னர்களின் துரோகங்கள் முறிந்து போகின்றன. செஞ்சோற்றுக் கடன் ஒன்று இடுகாட்டின் கடைசி நொடியில் தீர்க்கப்படுகின்றது. துரோகத்தின் பொருட்டு நிகழ்த்தப்படும் கொலைக்குப் பின்னால் வாழும் சில பஞ்சுமிட்டாய் மனங்களின் கண்ணீரில் உப்பு இனிக்கிறது. பால்யத்தில் பூத்த மீசையின் அணைப்பில் கட்டுண்டு கிடக்கிறது அறியா மனதின் அலறல் ஒன்று. சாபத்தின் கனவில் பாரதப் பெண்மை ஒன்று திக்கின்றி தொலைகிறது. இவர்கள் வாழும், வாழ்ந்த உலகில் நாமும் வாழ்கிறோம் என்ற சிறு சலனத்தை உண்டாக்கிச் செல்லும் இக்கதைகள் குற்ற உணர்வின்பால் தொலைக்கப்பட்டுவிட்ட இரவுகளில் எழுதப்பட்டவை.
Book Details
Book Title காந்தியின் தாடை (ghandiyin-thaadai)
Author கணேசகுமாரன் (Kanesakumaaran)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், New Releases | புது வரவுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மெனிஞ்சியோமா - கணேச குமாரனின் குறுநாவலான, இந்த புத்தகம் பயணிக்கும் வெளி புதியது. நோய்மை, இருண்மை என்று மருத்துவமனையின் முனகல்களோடு வலியை வாசகனுக்குக் கடத்துகிறது இந்நாவல்...
₹76 ₹80
இந்த நாவலை வாசிக்கும்போது கதையின் நாயகன் குமரன் வேறல்ல நாம் வேறல்ல என்கிற எல்லை பலருக்கு குறுகிக் கொண்டே வருவது தெளிவாகும். அவரது சிறுகதைகளில் இருக்கும் மொழி ஆளுமை நாவலில் இல்லாது எளிய மொழியில் உரையாடல்களாய் பின்னி இருக்கிறார். அவரது கதைகளுக்கான களம், உளவியல் சார்ந்த அவருடைய கதைகள் தமிழ் இலக்கியத்தி..
₹105 ₹110
சுயகொலைகள் நாம் நிகழ்த்துவதன்று. நம் சுயத்தினைக் கொலை செய்யும் இச்சமூகம். தற்கொலை முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். முயற்சி என்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். தோல்வியில் முடியும் பெரும்பாலான தற்கொலைகள் உன்மத்த உலகில் சஞ்சரிக்க வைக்கும். எண்ணிப்போட்டால் சாகமுடியாது. அள்ளிப்போட வேண்டும். உள்ளங்கை..
₹124 ₹130