Menu
Your Cart

ஞானப் பொக்கிஷம்

ஞானப் பொக்கிஷம்
-5 % Out Of Stock
ஞானப் பொக்கிஷம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்க்கையில் படிப்பதற்கு இரண்டு விதப் புத்தகங்கள் வேண்டும். ஒன்று உழைத்து அலுத்துச் சலித்திருக்கும்போது மனதை லகுவாக்குவதற்காகப் படிக்க வேண்டிய ‘லைட் ரீடிங்’ புத்தகங்கள். சில ‘கூகுள்’ புத்தகங்கள் & அதாவது விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்கான புத்தகங்கள். ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகங்கள். இரண்டும் அவசியம். இந்தப் புத்தகம் பொழுதைக் கழிப்பதற்கான புத்தகம் அல்ல. இரண்டாவது வகையைச் சேர்ந்தது. பல அரிய பழம் பெரும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதிலுள்ள விஷய ஞானத்தை விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் பி.என்.பரசுராமன். அண்ணன் - தம்பி - தமக்கை போன்ற உறவு முறைகளுக்கு, நாம் அறிந்த பொதுவான அர்த்தத்துக்கும் மேலாக விளக்கங்கள் கொடுத்து வியக்கவைக்கும் ‘அறப்பளீசுர சதகம்’, வாழ்க்கையில் செய்யாமல் நாம் அசிரத்தையாக இருக்கும் சில செயல்கள் எப்படி சுற்றுச் சூழலுக்கே மாசு விளைவிக்கிறது என்பதை எடுத்துக்கூறும் ‘சிறு பஞ்ச மூலம்’, இவ்வாறு ஒவ்வொரு அறத்தைச் சொல்லும், ‘ஆசாரக் கோவை’, ‘அற நெறிச் சாரம்’, ‘நல்வழி’ போன்ற ஏராளமான நூல்களில் உள்ள விஷயங்களை சில எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளார். மிகவும் அரிதான புத்தகங்கள். அனைத்துமே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன் பதிப்பிக்கப்பட்டவை. நூல் கிடைத்த விவரங்களையும், அது பதிப்பிக்கப்பட்ட முறையையும், அதை வெளிக்கொண்டு வர முயற்சி எடுத்தவர்களையும் பற்றி சில விவரங்களையும் எழுதியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஆழ்ந்து படிக்க வேண்டிய புத்தகமானாலும் சிரமம் தெரியாமலிருக்க ஆங்காங்கே சில லைட் ரீடிங் நிகழ்ச்சிகளும் இருப்பது இந்தப் புத்தகத்தில் வலிமை. சக்தி விகடனில் தொடராக வந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. பழம் பெரும் நூல்களில் உள்ள காலாகாலத்துக்கும் பொருந்தும் கருத்துகள், உண்மைகள் உங்களைக் கவரும் என்பது திண்ணம்.
Book Details
Book Title ஞானப் பொக்கிஷம் (Gnana Pokkisham)
Author பி.என்.பர‌சுராமன் (P.N.Parasuraman)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

விந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்பிணி அற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என்று பிரயாசை கொண்டவர்கள். சித்தர்களது வாழ்க்கை விசித்திரமானது. அவர்கள் உபதேசித்த பொன்ம..
₹238 ₹250