Menu
Your Cart

ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்

ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்
-5 % Available
ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்
ரியாஸ் அஹமது (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
ஃபலஸ்தீன மக்கள் அற்புதமான போராளிகள். தியாகமும் உறுதியும், பொறுமையும் விடாப்பிடியான உணர்வும் உடையவர்கள். அவர்களின் உள்ளிருந்து உருவான ஹமாஸ் இன்று அசைக்க முடியாத ஓர் அற்புத சக்தியாக வியாபித்து நிற்கிறது. அந்த இயக்கத்தின் ஒவ்வொரு தலைவரும் நம்ப முடியாத திறமையும் நுணுக்கமும் கொண்டவர்கள். அதன் தலைவர்களான அஹ்மத் யாஸின், ஸலாஹ் ஷஹாதா, அபூ ஷனப், ரன்திஸி, அய்யாஷ் என எத்தனையோ போராளிகளை சியோனிஸ அரசு கொலை செய்தது. எனினும் அப்போராட்டம் ஒய்ந்து விடவில்லை. தலைவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை வைத்திருக்கிறார்களோ என எண்ணுமளவு அவர்கள் ஒவ்வொருவராக கொலையுண்டாலும் புதிய தலைவர்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஹமாஸின் அரசியல் துறைத் தலைவர் கலாநிதி காலித் மிஷ்அல் பற்றிய ரியாஸ் அஹ்மதின் இந்நூலை நோக்க வேண்டும். இது காலித் மிஷ்அலின் அற்புதமான அறிவாளுமை பற்றியது மட்டுமல்லாமல், அவர் சார்ந்திருக்கும் விடுதலை இயக்கத்தினதும் அதன் போராட்டத்தினதும் வேர்களை விசாரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சியோனிஸ் ஆக்கிரமிப்பு வரலாற்றையும் அதனை எதிர்கொண்டுவரும் ஹமாஸ் விடுதலை இயக்கத்தையும் விரிந்த தளத்தில் நின்று ஆராயும் இந்நூல், அதன் அரசியல் பரிமாணத்தின் நடுநாயகமாக விளங்ககும் காலித் மிஷ்அலின் போரட்ட வாழ்வை மையப்படுத்தியுள்ளது இந்நூல்
Book Details
Book Title ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல் (Hamaas iyakka munnnodi Kalith Mishhal)
Author ரியாஸ் அஹமது
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, International Politics | சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha