Menu
Your Cart

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லரின் மறுபக்கம்
-5 % Out Of Stock
ஹிட்லரின் மறுபக்கம்
வேங்கடவன் (ஆசிரியர்)
₹119
₹125
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஹிட்லர் சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் குறித்த பதிவுகள் அதிகம். ஹிட்லர் விட்டுச்சென்ற வரலாற்று எச்சங்களைக் கண்டவராக, நூல் ஆசிரியர் வேங்கடம் புதுமுகப் பார்வையோடு ஹிட்லரை இங்கே பதிவு செய்கிறார். உணவுக்கே பிறரை எதிர்பார்த்திருந்த ஒருவன், நாட்டையே தனக்குக் கீழ் கொண்டுவந்த அதிரடியை பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக அற்புதமான எழுத்து நடையில் சொல்லி இருக்கிறார் நூல் ஆசிரியர் வேங்கடம். ஹிட்லர் யார், அவருடைய பிறப்பின் பின்னணி, வியன்னாவில் பிறந்து ஜெர்மனிக்கு வந்த கதை, ஜெர்மானிய ராணுவப் படையில் ஆரம்ப காலப் பங்கு, அந்த ராணுவப் படையையே தன் விரல் அசைவுக்கு ஏற்ப ஆட்டிவைத்த ரகசியம், உலகத் தலைவர்களின் பார்வையில் ஹிட்லரின் நிலை, யூத பாரம்பரியத்தில் வந்த ஹிட்லருக்கு யூத இனத்தின் மீது தீராப் பகை உண்டானதற்கான நிகழ்வுகள், ஆட்சியின் உச்சத்தில் இருந்து அநாதையான மர்மம், தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டதற்கான தடங்கள் என ஹிட்லரின் வாழ்வில் நடந்த ஒவ்வோர் அசைவுகளையும் இந்த நூல் சுவைபட விவரிக்கிறது. மேலும், ஹிட்லரின் மதம், அகிம்சை எழுத்துகளால் ஹிட்லருக்கு அறிவுரை கூறிய காந்தியின் கடிதங்கள், சர்ச்சில், முசோலினி, ஸ்டாலின் போன்ற உலகத் தலைவர்களுடனான தொடர்பு, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் பங்கு, மேற்கு ஜெர்மனிக்கும் கிழக்கு ஜெர்மனிக்கும் இடையே எழுந்த சுவரின் சுவாரஸ்யம், ஹிட்லரின் அந்தரங்க வாழ்க்கையில் பதிந்திருந்த பல்வேறு ரகசியங்கள், ஹிட்லரின் ரத்த வெறி செய்கைகளுக்கு மனோதத்துவ நிபுணர்களின் பதில்கள் என அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. வரலாற்றையும், அதன் பின்னணிகளையும் அறியத் துடிக்கும் வரலாற்றுப் பிரியர்களுக்கு, இந்த நூல் ஓர் அறுசுவைப் படையல்.
Book Details
Book Title ஹிட்லரின் மறுபக்கம் (Hitlerin marupakkam)
Author வேங்கடவன் (Vengatavan)
ISBN 9788184765045
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 191
Published On Jul 2013
Year 2013
Edition 6
Format Paper Back
Category History | வரலாறு, Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author