Menu
Your Cart

என் புரட்சி (மால்கம் X)

என் புரட்சி (மால்கம் X)
என் புரட்சி (மால்கம் X)
₹850
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்ட வேண்டும்’ என கிறிஸ்தவம் போதிக்க, ‘திருப்பி அடித்தால்தானே அடிமைத்தனம் ஒழியும்’ என அமெரிக்க கறுப்பர்களிடம் கலகக் குரல் எழுப்பிய சிந்தனையாளர் மால்கம் X. வன்முறையை போதித்த மால்கமை சுட்டுக் கொலை செய்ததைப் போலவே, அகிம்சையை போதித்த மார்ட்டின் லூதர் கிங்கையும் சுட்டுக் கொன்றது அமெரிக்க வெள்ளை இனவெறி. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அந்நாட்டிற்கு வெளியே இருந்து எதிர்த்தவர்களுக்கு ஆதரவாக, ‘நான் அமெரிக்கன் அல்ல’ என போர்க் கொடி தூக்கிய அமெரிக்கர். ‘மனித குல விரோதி’ என அமெரிக்காவால் முத்திரை குத்தப்பட்ட கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு அமெரிக்க மண்ணில் அடைக்கலம் கொடுத்தார். அனல் பறக்கும் பேச்சால், நூற்றாண்டு கால அடிமைச் சித்தாந்தத்தை அரசியல்படுத்தி அதை சர்வதேசமயமாக்கி, இனப் பிரச்சினையை ஏகாதிபத்தியத்தோடு அடையாளம் காட்டி, அமெரிக்க கறுப்பின இளைஞர்களை ஆர்ப்பரிக்கச் செய்து, அமெரிக்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி சர்வதேச அரங்கில் கவனம் பெற்ற நிலையில் 39 வயதிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார். தெருப் பொறுக்கி, ரவுடி, திறமையான சூதாடி, மதுவுக்கு அடிமை, போதைப் பொருட்களை விற்பவன், விபச்சாரத் தரகன், அடியாள், கெட்டிக்கார திருடன் என குற்றச் செயல்களின் மையமான மால்கம் X, 21 வயதில் சிறைக்குச் சென்று, 27 வயதில் விடுதலையான பின், மக்கள் தலைவரானது எப்படி?
Book Details
Book Title என் புரட்சி (மால்கம் X) (Yen puratchi)
Author S.காஜா குதுப்தீன்
Publisher இலக்கியச் சோலை (Ilakiya Solai)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha