Menu
Your Cart

இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்

இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
-5 %
இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
சு.இராசாராம் (ஆசிரியர்)
₹656
₹690
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், கல்வி மற்றும் மொழி மாற்றங்கள் சார்ந்த அழுத்தங்களின் வெளிப்பாடு. இலக்கணத்தை எழுது வதற்கு ஒவ்வொரு இலக்கணக் கலைஞனுக்கும் வலுவான காரணங்களும் சமூகப் பொறுப்பும் உள்ளன. இவ் விலக்கண அரசியல் பின்னணியில் இலக்கணத்தின் பல்வேறு பரிமாணங்களின் பிற சமூக விஞ்ஞானங்களோடுள்ள தொடர்பு பன்முக நோக்கில் அணுகப்பட வேண்டும். இலக்கணம் புனிதமானது; மாறாதது என்னும் பழைமைப்பற்றைக் கைவிட்டு யதார்த்த மொழி நிலையைப் பூதக்கண்ணாடிகொண்டு பார்க்கும் மனப்பாங்கு வளர வேண்டும். இலக்கணம், ஒரு சமூக உற்பத்திப் பொருள். எனவேதான் இதன்மீது சமுகத்தின் அடையாளப்படுத்தலும் அழுத்தமாக உள்ளது. இந்நிலைப்பாட்டைத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு ‘இலக்கணவியல்’ என்னும் ஓர் சமூக விஞ்ஞானத் துறைப் படிப்பாக அதன் மீக்கோட்பாட்டையும் மீக்கோட்பாட்டின் அடிப்படையிலான கோட்பாடுகளையும் முன்வைக்கிறது இந்நூல்.
Book Details
Book Title இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும் (Ilakkanaviyal Meekotpadum Kotpadugalum)
Author சு.இராசாராம் (S.Rajaram)
ISBN 9789380240039
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 544
Published On Nov 2009
Year 2010
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்திய இருமொழி அகராதி வரலாற்றில் செருமானியப் பாதிரிமார் முக்கிய இடம் வகிக்கின்றனர். இன்று செருமன் மொழி பேசப்படும் சில அயல்நாடுகளில் தமிழர் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்தியவியல் படிப்பு, குறிப்பாக இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை பற்றிய படிப்பும்..
₹371 ₹390
“மொழி என்பது அகராதிகளிலும் இலக்கண நூல்களிலும் மட்டும் அடங்கிவிடும் ஒரு திட்டவட்டமான அமைப்பு அல்ல. அது, தான் புழங்கும் பண்பாட்டுச் சூழலின் உயிரோட்டமான பிரதிபலிப்பு. அகராதிகளாலும் இலக்கண நூல்களாலும் ஒருபோதும் முழுமையாக வரையறுத்துவிட முடியாத பண்பாட்டுத் தளத்தைத் தன் ஊற்றாகக்கொண்ட இடையறாத நீரோட்டம்..
₹143 ₹150
மொழியின் பல்வேறு பரிமாணம் சார்ந்த படைப்புக்கள் பிற இந்திய மொழிகளின் வெகுசன ஊடகங்களில் தமிழைப் போல் இடம்பெற்றதில்லை. தமிழ இலக்கண, இலக்கியச் சிந்தனைகளுக்கு அப்பால் சமூக அரசியல் விழுமியங்கள் தமிழ் மொழியில் வற்புறுத்திய நவீனமயமாக்கம் சார்ந்த எழுத்துக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க  ஐரோ..
₹261 ₹275
மொழி ஒரு சமூகத்தின் உற்பத்திப் பொருள். எனவே, சமூக அரசியல் நிலைகளில் அதன் தகுதி குறித்த பிரச்சனைகளுக்கு உள்ளாவது, பொருளாதார அடுக்குகளில் சாதிய, வட்டார வேறுபாடுகளைப் புலப்படுத்தி நிற்பது, கல்வித்துறையில் உரிய பங்கைப் போராடிப் பெறுவது, புலம் பெயர்ந்த நாடுகளில் இனஅடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள மல்ல..
₹333 ₹350