இந்நூல் இலக்கியவாசிப்புக்குள் நுழையும் புதியவாசகர்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான கேள்விகளுக்கு விடையளிக்கிறது. இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாசிப்புக்கு பயிற்சி தேவையா, இலக்கிய வாசகன் எதிர்கொள்ளும் தடைகள் என்ன, இலக்கியக் கருத்துக்களைச் சொல்வது எப்படி என்பதுபோன்ற பல வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் ..
புத்தகங்கள் தான் நமக்குள் உலகம் பற்றிய கனவை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பொருளையும் நாம் பார்ப்பது அதன் வெளிப்படையான உருவத்தில் மட்டுமில்லை நமது சொந்த உணர்வுகளையும் சேர்த்து தான். எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் இந்த தொகுப்பில் சர்வதேச,இந்திய, தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம்..
பழந்தமிழ் இலக்கியத்தில் மிகச் செழுமையான பகுதி தனிப்பாடல்கள். வெவ்வேறு சூழல்களில் புலவர்கள் பாடியவை. இப்பாடல்கள் காட்டும் உலகம் பரந்தது. வள்ளல்கள், அரசர்கள், புலவர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் குடிமக்களில் பல்வேறு தரப்பினர் இப்பாடல்களில் இடம்பெறுகின்றனர். தமிழ்நாட்டு வாழ்க்கை முறை விரிவாகப் பதிவாகியிருக..
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் ; தமிழில் தோன்றிய ஒரு பொது மறை ; காலங் கடந்தும் எல்லை கடந்தும் படிக்கப்பெறும் நூல் ; ஆய்வு செய்யப் பெறும் ஒரு சிறந்த நூல். தமிழிலக்கியத் துறையினரோடு மட்டுமின்றி அண்மைக் காலமாகத் திருக்குறளைப் பல்வேறு துறை அறிஞர்களும் கற்று ஆய்வு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இது வரவேற..
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது 'போக்கிடம்' 'வண்ணமுகங்கள்' (நாவல்கள்) இலக்கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் / சிறுகதையாசிரியராக அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் பல தனிப்பட்ட பரிசுகளை..
இந்தக் கட்டுரைகள் எல்லாமே வாழ்க்கையில் நிகழ்ந்தவை, கற்பனையில் தொகுக்கப்பட்டு மையம் கண்டடையப்பட்டவை. அமைப்பில் கட்டுரைக்கும் கதைக்கும் நடுவே நிற்பவை. உணர்ச்சிகரமானவை, கதைக்கான ஒழுக்கும் ஓட்டமும் கொண்டவை, ஆனால் தங்களை கட்டுரையென்றே முன்வைப்பவை
”அறம் போன்ற கதைகளில் மாமனிதர்களைப் பற்றிச் சொன்னேன். இக்க..
தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் 'விகடன் தடம்' இதழ் தனித்த இடம் பெற்றது. விகடன் தடம் சார்பில் நடத்திய நேர்காணல்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. தமிழ் இலக்கிய வாசக உலகில் முன்னணி எழுத்தாளர்களாத் திகழ்ந்த, திகழ்பவர்களிடம் பிரத்யேகமாக நேர்காணல்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ்..
இலக்கியம், மொழி, மனித உறவுகள் என பல திசைகளிலும் பயணிக்கும் 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அனைத்துக் கட்டுரைகளிலும் வெளிப்படும் நூலாசிரியரின் தனித்துவமான பார்வை நம்மை வியக்க வைக்கிறது.
படைப்பிலக்கியவாதியான நூலாசிரியரின் தமிழ் மொழியறிவைப் பறைசாற்றும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. பல ..
‘திண்ணை ‘ இணைய இதழில் ஜெயமோகன் எழுதிய பத்து அறிவியல் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. வெளிவந்த நாள்களில் விரிவாக விவாதிக்கப்பட்ட கதைகள் இவை. முற்றிலும் இந்திய தமிழ்ச் சூழல் சார்ந்த அறிவியல் புனைகதை வடிவத்துக்கான ஒரு தேடல் இக்கதைகளில் உள்ளது. சித்த மருத்துவம், ரசவாதம், ஞான மரபுகள் என இதன் தளங்கள் மாறுபட்ட..
நிஷா மன்சூர் அடிப்படையில் ஒரு கவிஞர். விரிவான வாசிப்புப் பழக்கம் கொண்ட படிப்பாளி. சூஃபித்துவத்தில் நல்ல ஆழமான ஈடுபாடு கொண்டவர். சூஃபித்துவ கோட்பாடுகளை அறிவார்ந்த தளத்தில் வியாக்யானம் செய்பவர். நல்ல ஆற்றல் மிக்க பேச்சாளரும் கூட. அவருடைய இலங்கை பயணத்தில் கூடவே சில நாட்களை கழிக்க நேர்ந்தது வாழ்வின் அற்..