-5 %
களிநெல்லிக்கனி - ஔவையார் கவித்துவத் திரட்டு
இசை (ஆசிரியர்)
₹219
₹230
- Edition: 1
- Year: 2024
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை மலரும் நோய்' முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.' தமிழ் மரபில் பெண் புலவருக்கு 'ஔவை' என்னும் பொதுப்பெயர் சூட்டுதல் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ எட்டு ஔவையார்கள் எழுதிய பல நூல்களையும் முழுமையாக வாசித்துப் பொருளுணர்ந்து, உரை இல்லாதவற்றையும் முயன்று கற்று இந்நூலை எழுதியிருக்கிறார். நவீன இலக்கிய வாசகர்களுக்கு மரபிலக்கியக் கவிச்சுவையை உணர்த்தும் நோக்கம் கொண்ட நூல் இது. எளிய மொழி, மென்மையான விமர்சனம், சுயபகடி, கவிச்சொல்லைச் சிக்கெனப் பிடித்து விதந்தோதல், மரபிலக்கியம் மீதான மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தேன் தடவிய விரலால் இசை எழுதியிருக்கும் இந்நூல் வாசிக்க வாசிக்க நாவூறச் செய்கிறது.
Book Details | |
Book Title | களிநெல்லிக்கனி - ஔவையார் கவித்துவத் திரட்டு (Kali Nellikkani) |
Author | இசை (Isai) |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Year | 2024 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Sangam literature | சங்க இலக்கியம், 2024 New Releases |