-5 %
இவான் (புகழ்பெற்ற சிறார் நாவல்)
விளாதீமீர் பகமோலவ் (ஆசிரியர்)
₹152
₹160
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீலவால் குருவி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
எத்தனையோ ஆண்டுகளாகப் போரைப் பற்றி அறியாத பொதுமக்கள் இருந்திருக்ககிறார்கள். விமானங்களிலிருந்து அவர்களுடைய நகரங்கள் மீது குண்டு போடப்படவில்லை, பீரங்கி வண்டிகளின் சக்கரங்களின் கங்கிலித் கோவைகளால் அவர்களது பயர்கள் மிதித்தழிக்கப் படவில்லை. அவர்களது உறவினர்களின் மரணரச் செய்தி அறிவிப்புக்களை ஏந்தி வந்து மௌனமாக தபால்காரர்கள் அவர்களது கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்க வில்லை. போரைப் பற்றி புத்தகங்களிலிருந்தும், திரைப்படங்களிலிருந்தும், கிழவர்கள் கூறிய கதைகளினின்றும் மட்டுமே அந்த மக்கள் அறிந்திருந்தார்கள்.
போரைப் பற்றி அறியாத மக்களை இந்நூல் திகைக்க வைக்கும், தனது வீட்டுப் பாடங்களைச் செய்வதும், தனது நண்பர்களுடன் விளையாடுவதாக இருந்த பள்ளி சென்ற சாதாரணப் பையன், போரின் கடுஞ்சோதனைக்கு ஆளாகி ஒரு போர்வீரனைப் போல மடிக்கிறான் - இதை அவர்கள் உன்மை யானது இல்லை என்றே கருதுவார்கள்.
ஆனால் இந்நூலின் முக்கிய கதாபத்திரம் பற்றி - இவான் என்ற ருஷ்யப் பெயர் கொண்ட ருஷ்யப் பையனைப் பற்றி - நாம் அறியக் கூடிய எல்லாமே உண்மைதான்.
இன்னும் அதிகமாகச் சொல்லப்போனால், இச்சிறு கதையானது மிகப் பெரிய பேரிடர் பயக்கத்தக்க ஓர் உண்மையின் ஒரு பகுதி, அசாதாரணமான வீர வரலாற்றின் ஒரு பக்கம், போரில் குழந்தைகள் என இது அழைக்கப்படுகிறது.
போர் என்பது மனிதனுடைய வேலை, வளர்ந்தவர்களின் வேலை என்பதை ஒவ்வொருவருமே அறிவர். ஒருவேளை நீண்ட காலத்திற்கு முன்பு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்காலத்திய போர்கள் - அடிமைப் படுத்தும் ஏகாதிபத்தியப் போர்கள்- இரக்கமற்றவை. இந்தப் போர்கள் - குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் - இப்படி யாரையும் விட்டு வைப்பதில்லை. இத்தகைய போர்களில் ஆக்கிரமிப்பாளர்கள் வெறும் போர்வீரர்களாக இல்லாது, கொலைக்காரர்களாக இருக்கிறார்கள்.
இம்மாதிரியாகத்தான் சோவியத் மீதான பாசிச ஜெர்மனியின் போர் மிகவும் கொடுமையானதாக இருந்தது. மனிதகுல வரலாற்றிலேயே மிக அவலமானதாக இருந்தது.
Book Details | |
Book Title | இவான் (புகழ்பெற்ற சிறார் நாவல்) (Ivaan) |
Author | விளாதீமீர் பகமோலவ் |
Publisher | நீலவால் குருவி (Neelavaal Kuruvi) |
Published On | Apr 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |