- Edition: 1
- Year: 2021
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: பனுவல் பரிந்துரைகள்
கன்னி - நாவல்:
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதையாகவே எழுதிய ‘கன்னி’ நாவலில் இருந்து சில பகுதிகள்: “வண்ணங்கள் மறைகின்றன. வானவில்லும் இல்லாமலாக காற்றோடு பாய்கின்றன மேகங்கள். ஒளியின் சிறகுகள் முன்பே முறிந்து தணிந்தன. நிழல் திரை விரிந்து பகலை மூடுகிறது. கடல் இருள்கிறது, கரைகள் பதைக்கின்றன. மின்னல் குரலில் கண்ணால் பாடுகிறது முகமற்ற வேட்கை. விண்ணைப் பார்த்திருந்த சின்ன மலரொன்று அச்சத்தில் மணம் தடுமாறுகிறது. ஆந்தையின் தலையில் ஆவலொன்று பச்சை மச்சமாகி இரவுக்காக விரிகிறது. கிழங்கை முகர்ந்து பார்த்து முத்தம் மட்டும் தந்துவிட்டுப் பசியோடு கிடைக்குத் திரும்புகிறது முயல்குட்டி. கன்னிமையின் தோளில் விழுந்து நாணத்தின் கன்னத்தில் தெறிக்கிறது மழை. மழை வலுக்கிறது. மணல் முலைகள் கரைந்தோடுகின்றன. ஏதோ ஒரு சிப்பி பெண்ணாகி இதழ் விரிக்கிறது.”
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்:
இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு
ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும்
வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ?
வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகளாய்க்
கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத்
தூண்டுவதாகும் . மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே
படுகிறது . ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி
இது.’
Book Details | |
Book Title | ஜெ. பிரான்சிஸ் கிருபா நூல்கள் (Combo) (kiruvba) |
Author | ஜெ.பிரான்சிஸ் கிருபா (J.Francis Kiruba) |
Publisher | பனுவல் பரிந்துரைகள் (Panuval Suggestions) |
Published On | Nov 2021 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Novel | நாவல், Poetry | கவிதை, Combo Offer |