Menu
Your Cart

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
-5 %
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
நீட்ஷே (ஆசிரியர்), ரவி (தமிழில்)
₹499
₹525
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினார் - நீட்ஷே(தமிழில் - ரவி):

நம் பொதுமனப் பாங்குகளைத் தர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்திவிடுகிற நூல் இது.

1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra வை தத்துவார்த்த நாவல் என்றே குறிப்பிடுகிறார்கள். நான்கு பகுதிகளாக எழுதப்பட்ட இந்நூல் அதிமனிதனான ஜராதுஷ்ட்ராவின் வருகை மற்றும் அவனது எண்ணங்களை பற்றி விரிவாக கூறுகிறது. பைபிள் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அது போன்ற கவித்துவ மொழிநடையில் அதன் நேர் எதிராக சிந்தனைகளை நீட்ஷே எழுதியிருக்கிறார்.

நீதிமொழிகள் போன்று பாடல்களாகவும் அதற்கான விளக்கமாகவும் எழதப்பட்ட இந்த நூல் ஜராதுஷ்ட்ராவின் சொல்லாடல்களாக விரிகின்றன. நல்லது மற்றும் தீயதிற்கு அப்பால் நிற்கும் நற்குணம் கொண்ட அதிமனிதனாக ஜராதுஷட்ரா சித்தரிக்கபடுகிறான். பலநேரங்களில் ஜராதுஷ்ட்ரா புத்தரை போலவே இருக்கிறான். புத்த அறகருத்துக்கள் போன்ற தொனியே அவனிடமும் ஒலிக்கிறது.

ஜராதுஷ்ட்ராவை வாசிப்பது ஏகாந்தமான அனுபவம். அது நம்மை அலைகள் உள்ளே இழுப்பது போல தானே இழுத்து செல்கின்றன. அலை வெளியே தள்ளுவது போல தானே வெளியே தள்ளவும் செய்கின்றன. ஜராதுஷ்ட்ராவை வாசிப்பது ஒருவன் தன்னை தானே உற்று நோக்கி கொள்வது போன்றதே. உடலை அவதானிப்பது போல நாம் சிந்தனைகளை உற்று நோக்கி ஆராய்வதோ, அவதானிப்பதோ இல்லை. இந்ததளத்தில் தான் ஜரதுஷட்ரா செயல்படுகிறான்.

- எஸ். ராமகிருஷ்ணன்

எங்கு தனிமை முடிவடைகிறதோ,அங்கே சந்தை ஆரம்பிக்கிறது; எங்கே சந்தை ஆரம்பிக்கிறதோ,அங்கே மகத்தான நடிகர்களின் பேரோசையும்,விஷப்பூச்சிகளின் ரீங்காரமும் ஆரம்பிக்கிறது.

- நீட்ஷே ( ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்)

நாம் நம்மைக் குறித்து மகிழக் கற்றுக்கொண்ட பிறகே , மற்றவர்களைப் பாதிக்கவும், மற்றவர்களுக்கு எதிராகச் சதி செய்யவும் கற்றுக்கொள்வதை மறக்கிறோம்.

- ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் - நிட்ஷே.

Book Details
Book Title ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் (Jarathshtra ivaru kurinar)
Author நீட்ஷே (Neetshe)
Translator ரவி (Ravi)
ISBN 9788189359447
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 423
Year 2017
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்திய மனத்தின் ஆதார ஸ்ருதியை வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காவியங்களின் வாயிலாகப் பரிசீலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கப்படவேண்டிய நூல் மட்டுமல்ல ‘க’. இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தை இந்த நூல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. பிரக்ஞையின் இயக்க சக்திகளான ஆசாபாசங்..
₹428 ₹450
இந்தக் கவிதைகளில் ஒலிப்பது மறுத்துப் புலம்பும் பெண் குரல் அல்ல. அடக்குமுறையையும் ஆதிக்கத்தையும் அனுபவித்து உள்வாங்கிச் செரித்து விடுதலையடைந்த பெண் குரல். விளிம்பை மையமாக்கும் பெண்ணின் வலிமை வெளிப்படும் கவிதைகள் இவை...
₹48 ₹50