Menu
Your Cart

வீர சிவாஜி

வீர சிவாஜி
-5 % Out Of Stock
வீர சிவாஜி
ஜவர்லால் (ஆசிரியர்)
₹81
₹85
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம்மை ஆண்ட பல நூறு மன்னர்களில் வெகு சிலரை மட்டுமே இன்றளவும் நாம் நினைவுகூர்கிறோம். அவர்களிலும் வெகு சிலரை மட்டுமே கொண்டாடவும் செய்கிறோம். சத்ரபதி சிவாஜிக்கு அந்த வரிசையில் ஒரு தனியிடம் உண்டு. மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர் பேரரசர் சிவாஜி. அந்நியத் தாக்குதல்களுக்கு ஆட்படாத ஒன்றுபட்ட இந்திய தேசத்தை உருவாக்குவதே அவருடைய பெரும் கனவாக இருந்தது. இந்தக் கனவை நிறைவேற்ற உள்ளூர் மற்றும் அயல்நாட்டு ஆக்கிரமிப்புச் சக்திகளுடன் தொடர்ச்சியாக அவர் போரிடவேண்டியிருந்தது. வீரத்துக்கும் வலிமைக்கும் ராஜதந்திரத்துடன்கூடிய போர்முறைக்கும் அடையாளமாக இன்றளவும் சிவாஜி கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. சிவாஜியின் எதிரிகளோடு ஒப்பிடுகையில் அவருடைய ராணுவம் மிகவும் சிறியது. ஆனாலும் அதையே தன்னுடைய ஒரு பலமாக மாற்றி, நவீன கெரில்லா போர்முறையை வளர்த்தெடுத்து வெற்றிகள் பல குவித்தார். கட்டுக்கோப்பான ராணுவத்தை உருவாக்கி, வழிநடத்திச் சென்றதில் மட்டும் சிவாஜியின் வெற்றி அடங்கியிருக்கவில்லை. அதே கவனத்தை அவர் நிர்வாகத்திலும் செலுத்தினார். ஒரு பேரரசர் எப்படித் திகழவேண்டும் என்று மட்டுமல்ல ஒரு தேசத்தின் தலைவர் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்பதற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவர் வீர சிவாஜி. இந்தப் புத்தகம் அவர் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலகட்டத்தையும் குதிரையின் பாய்ச்சல் நடையில் சுவாரஸ்யமாகச் சொல்கிறது
Book Details
Book Title வீர சிவாஜி (Veera Sivaji)
Author ஜவர்லால் (Jawarlal)
ISBN 9789351351726
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 120
Published On Nov 2013
Year 2007
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இதுவரை வரலாற்றை இரு பெயர்களைக் கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். கிறிஸ்து. பிறகு, திருவள்ளுவர். மதிப்பெண்கள் பெறுவதற்காக மனனம் செய்ததைத் தாண்டி திருக்குறளை எப்போது கடைசியாக வாசித்திருக்கிறோம்? மனப்பாடச் செய்யுளாக நமக்கு அறியப்பட்டது குறளின் குற்றம் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டது என்ற ஒரே கார..
₹152 ₹160
கே.ஜி.ஜவர்லால் ஓர் இயந்திரவியல் பொறியாளர். வாகனங்கள் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றியவர். இவரது சிறுகதைகள் சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. ஐம்பெரும் காப்பியத்தில் முதல் மற்றும் முதன்மையான காப்பியம், சிலப்பதிகாரம். தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, சமயம், ..
₹181 ₹190