![ஜெஸ்ஸி ஜெஸ்ஸி](https://assets2.panuval.com/image/cache/catalog/1120/jersey-10018916-550x550.png)
-5 %
ஜெஸ்ஸி
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (ஆசிரியர்)
₹116
₹122
- Edition: 1
- Year: 2020
- ISBN: 978-93-88734-08-0
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கடவுள் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரையிலும் படைத்த மனிதர்களில், அதிக நேரம் எடுத்துக்கொண்டு செதுக்கிய முகம் ஜெஸ்ஸியின் முகமாகத்தான் இருக்கும். மழையில் நனைந்த ஜெஸ்ஸியின் இளம் மஞ்சள் நிற முகத்தில் பெளர்ணமி நிலா மீது யாரோ தண்ணர் தெளித்தாற்போல் மழைத்துளிகள். நான் எபியிடம், “என்னா கலர்ல்ல? அவ பிறந்தப்ப டாக்டர், நர்ஸ்க்கெல்லாம் கண்ணு கூசியிருக்கும்டா.....? என்று கூற... எபி சிரித்தான். “உலகத்துலயே ரொம்பவும் அழகான மூணு எழுத்து என்ன தெரியுமா? ஜெ....ஸ்...ஸி....” என்று கூற..... அவன் “ஆண்டவா...” என்று கையெடுத்துக் கும்பிட்டான். எவ்வளவோ அழகான பெண்கள் கூட ஏதோ ஒரு கணத்தில்.... கொட்டாவி விடும்போதோ, அழும்போதோ, தூங்கி எழுந்த நிமிடத்திலோ அழகின்றி இருப்பார்கள். ஆனால் நான் ஜெஸ்ஸியை ஒரு முறை கூட அழகின்றி பார்த்ததில்லை. நிமிடத்திற்கொரு முறை, தனது கைக்குட்டையில் வைத்திருக்கும் அழகிலிருந்து கொஞ்சம் அள்ளி முகத்தில் பூசிக்கொள்வது போல், ஜெஸ்ஸி எல்லா நிமிடங்களிலும் அழகாகவே இருந்தாள். ஒருநாள் நான் எபியிடம், “எனக்கு ஒரு ஆசைடா...” என்றேன். “என்ன?” “இந்த உலகம் முழுக்க அழிஞ்சுபோயி, நானும், ஜெஸ்ஸியும் மட்டும் இந்த உலகத்துல தனியா இருந்தா எப்படி இருக்கும்?” என்றவுடன் அதிர்ந்துபோன எபி, “நானும் அழிஞ்சுடணுமா?” என்றான். நான் புன்னகையுடன் தலையை ஆட்டினேன். “தனியா ரெண்டு பேரும் என்னடா பண்ணுவீங்க?” “ரெண்டு பேரும் இந்த மலை முழுக்க, மழைல நனைஞ்சுகிட்டு, கையக் கோத்து நடந்துகிட்டே இருப்போம்” “நீங்க சும்மா நடந்து போறதுக்கு நாங்க ஏன்டா அழியணும்? நாங்க பாட்டுக்கும் ஒரு ஓரமா வாழ்ந்துட்டுப் போறோமேடா” என்ற எபியைப் பார்க்க பாவமாக இருந்தது.
Book Details | |
Book Title | ஜெஸ்ஸி (jersey) |
Author | ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (Ji.Aar.Surendharnaadh) |
ISBN | 978-93-88734-08-0 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 128 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கதைகள், Love | காதல் |