Menu
Your Cart

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை
-5 %
ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை
ஜெ.ராம்கி (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை

எப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழ அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படிதான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது.

ஒரு நடிகையாத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர். 

ஏராளமான ஊழல் வழக்குகள், கோர்ட் படியேறல்கள், தேர்தல் தோல்விகள், அடியோடு வீழ்ச்சி என்று காலம் அவரை எத்தனை அசைத்துப் பார்த்தாலும் அசையாத இரும்புப் பெண்மணி. அவரது உடன்பிறவா சகோதரி பற்றி, அவர்மூலம் வந்து சேர்ந்த உறவுகள் பற்றி, உலகம் வியந்த அவரது வளர்ப்பு மகன் திருமணம் பற்றி, அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகள், புடைவைகள், செருப்புகள் பற்றிக்கூட கோடி கதைகள் சொல்லவும் கேட்கவும் எப்போதும் ஆள்களுண்டு தமிழகத்தில்.

தமிழ்த் திரைவானில் கோலோச்சிய நாள் முதல் தமிழக அரசியலின் தவிர்க்கமுடியாத சக்தியாக உயர்ந்தது வரையிலான ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய வாழ்க்கை முழுவதுமாக இந்நூலில் பதிவாகியிருக்கிறது.

Book Details
Book Title ஜெயலலிதா: அம்மு முதல் அம்மாவரை (Jeyalalitha: Ammu Muthal Ammavarai)
Author ஜெ.ராம்கி (Je.Raamki)
ISBN 9788183689557
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 168
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆயிரக்கணக்கானோர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தை, முதியோர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் வீட்டோடு சேர்த்து கொளுத்திய சம்பவங்கள் ஏராளம். ஒருவரை அழிப்பதற்கு அவர் ஒரு ..
₹166 ₹175
வெள்ளித்திரைக்கு வந்த பிறகு பிரபலமடைந்தவர் அல்ல பாகவதர்.  நாடகத்துறையில் இருந்தபோதே வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர். அதன் காரணமாகவே வெள்ளித்திரைக்கு வந்து, வசூல் நாயகனாகவும் வலம் வந்தவர். பொதுவாக பாகவதர் என்றால் மன்மத லீலை பாடலைப் பற்றிப் பேசுவார்கள். ஆண்டுக்கணக்கில் அவர் படங்கள் ஓடின என்பார்கள். மிஞ..
₹122 ₹128
மிகுந்த பரபரப்போடு செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வியப்போடு நிறையவே விவாதித்திருப்போம். அதன்பின் மெல்ல, மெல்ல நம் நினைவுகளிலிருந்து இந்தச் செய்திகள் மங்கி ஒரு கட்டத்தில் மறைந்தே போயிருக்கும். பிரேமானந்தா, ராம்விலாஸ் வேதாந்த..
₹228 ₹240