- Edition: 1
- Year: 2003
- Page: 168
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
ஜுதான் எச்சில்
“திருமண நாட்களின்போது, மணமக்களின் உறவினர்களும், நண்பர்களும் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, வெளியே சுஹரா சாதி மக்கள் கூடையோடு காத்துக்கிடப்பார்கள். விருந்து முடிந்தவுடன் அந்த எச்சில் இலைகளை சுஹ்ராக்களின் கூடைகளில் வைத்து விடுவார்கள். அதை இவர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, அந்த இலைகளில் எஞ்சியிருக்கும் எச்சில் உணவை எடுத்துக் கொள்வார்கள். பூரி, இனிப்பு, காய்கறிகள் போன்றவற்றின் மிச்ச சொச்சங்களே இவர்களுக்கு அளவில்லாத சந்தோசத்தைத் தரும். இந்த எச்சில் உணவைச் சாப்பிட்டே இவர்கள் திருப்தியடைவார்கள். இலையில் மிச்சம் மீதி வைக்காமல் சாப்பிட்ட நபர்களை பெரும் தீனி தின்பவர்கள் என்று சபிப்பார்கள். வாழ்க்கையில் ஒரு போதும் விருந்து சாப்பிட்டிராத மக்கள் இவர்கள். எவ்வளவு பரிதாபம்! அதனால்தான் இவர்கள் அனைத்து எச்சில் உணவையும் ருசித்துச் சாப்பிட்டார்கள். பல நாட்கள் வரையிலும், மறக்கமுடியாத எச்சில் உணவை கல்யாணவிருந்துகளில் விட்டுச்சென்ற விருந்தாளிகளைப் பற்றிப் பெரியவர்கள் கதைகதையாகப் பேசிக்கொள்வார்கள்.”
Book Details | |
Book Title | ஜுதான் எச்சில் (Joothan Yechil) |
Author | ஓம்பிரகாஷ் வால்மீகி (Ompirakaash Vaalmeeki) |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 168 |
Year | 2003 |
Edition | 1 |
Format | Paper Back |