Menu
Your Cart

கனம் கோர்ட்டாரே!

கனம் கோர்ட்டாரே!
-5 %
கனம் கோர்ட்டாரே!
கே.சந்துரு (ஆசிரியர்)
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர்  கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.  தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் இன்றைய சூழலில் அதற்காகத் தன் குரலை இக்கட்டுரைகளில் வலுவாகப் பதிவுசெய்துள்ளார். நீதித் துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் கட்டுரைகள் மூலம் தகர்க்கிறார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களைத் தகுந்த தர்க்கத்துடன் விமர்சிக்கிறார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள சிலைகளின் வரலாற்றுச் சுவாரஸ்யங்களைச் சுவைபடச் சொல்கிறார். விளம்பரப் பலகைகளின் கலாச்சாரம் நம் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதை சமூக ஆய்வாளரின் பார்வையிலிருந்து ஆராய்கிறார். சந்துருவுக்கு நெருக்கமான வாசக மொழி கைகூடியிருக்கிறது. சட்டங்களின், சட்டத் திருத்தங்களின் பின்னணிகளை நுட்பமாகக் குறிப்பிடும் இத்தொகுப்பு சட்டத் துறையினருக்கு ஒரு கையேடாகிறது. சமூகத்தின் எல்லா நிகழ்வுகளையும் சட்டம் என்ற சட்டகத்தின் மூலம் பார்க்கும் சந்துரு நீதிமன்றம் எளிய மக்களும் அணுகக்கூடிய மக்கள் மன்றம் என்ற நம்பிக்கையை இந்தக் கட்டுரைகளின் மூலம் விதைக்கிறார்.
Book Details
Book Title கனம் கோர்ட்டாரே! (Kanam Kortaare)
Author கே.சந்துரு (K.Chandru)
ISBN 9789382033790
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 280
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சட்டத்தால் யுத்தம் செய் - நீதியரசர்.சந்துரு :நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற நியதியை நீதிமன்றங்கள்தான் இன்று வரை நிலைநி..
₹228 ₹240
இந்திய நீதித் துறையின் முதன்மையான பிரச்சினை என்பது தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அல்ல, சட்டம் குறித்த அடிப்படை அறிவு மக்களிடம் போய்ச் சேர்க்கப்படாததுதான். உண்மை யில் சட்டம் ஜனநாயகப்படுத்தப்படாததன் விளைவைத்தான் நீதியின் தள்ளாட்டமாக, பாரபட்சமாக நாம் உணர்கிறோம். சட்ட ஜனநாயகமயமாக்கலுக்காக நீதித் துறைக்கு..
₹190 ₹200
வழக்குரைஞர்கள், முக்கியமாக இளம் வழக்குரைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல்வேறு சட்டப் பிரச்னைகளில் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தைப் பற்றிய பார்வையையும் விரிவாக்கிக் கொள்ளலாம்...
₹190 ₹200
நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில் சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்பட..
₹214 ₹225