Menu
Your Cart

சட்டத்தால் யுத்தம் செய்

சட்டத்தால் யுத்தம் செய்
-5 %
சட்டத்தால் யுத்தம் செய்
கே.சந்துரு (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

சட்டத்தால் யுத்தம் செய் - நீதியரசர்.சந்துரு :

நீதிமன்றம், ஜனநாயகத்தின் முக்கியமான தூண். அறச் சிந்தனையும் மனிதாபிமானமும் அருகிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், சாமானியன், முதலும் கடைசியுமாக நம்புவது நீதிமன்றங்களைத்தான். சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்ற நியதியை நீதிமன்றங்கள்தான் இன்று வரை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல வழக்குகளை தாமே முன்வந்து எடுத்துக்கொண்டு நீதி வழங்கி இருக்கின்றன நீதிமன்றங்கள். பாதிக்கப்படும் எவரும் நீதிமன்றத்தின் துணையோடு, சட்டத்தால் யுத்தம் செய்து, வெற்றிபெறலாம் என்பதைக் கூறுகிறது இந்த நூல். நீதிபதி சந்துரு பல வழக்குகளில் அதிரடியான தீர்ப்பு வழங்கி, சட்டத்தின் மாண்பைக் காத்து, மக்கள் மனதில் நின்றவர். அப்படி, தான் சந்தித்த வழக்குகள் பற்றியும், பிற வழக்குகள் பற்றியும், அவள் விகடனிலும், கல்கி இதழிலும் எழுதிய தொடர் கட்டுரைகள் இப்போது நூலாகியிருக்கிறது. கும்பகோணத்தில் மூதாட்டி ஒருவர், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒரு சின்ன போஸ்ட் கார்டில் நீதிமன்றத்துக்கு அனுப்பியதை ஏற்றுக்கொண்டு அந்த மூதாட்டிக்கு நியாயம் கிடைக்கச் செய்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை... இதுபோன்ற பல வழக்குகள் பற்றி விவரித்திருக்கிறார் நீதிபதி சந்துரு. நீதிமன்றத்தை அணுக முடியாமல் அல்லது அணுக பயந்துகிடக்கும் சாமானியர்களின் தயக்கத்தைப் போக்கி, மக்களுக்காகவே சட்டம் என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் நூல் இது

Book Details
Book Title சட்டத்தால் யுத்தம் செய் (Sattathal yutham sei)
Author கே.சந்துரு (K.Chandru)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 159
Year 2017
Format Paper Back
Category Law Books | சட்டப் புத்தகங்கள், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர்  கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.  தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு..
₹314 ₹330
இந்திய நீதித் துறையின் முதன்மையான பிரச்சினை என்பது தேங்கிக் கிடக்கும் வழக்குகள் அல்ல, சட்டம் குறித்த அடிப்படை அறிவு மக்களிடம் போய்ச் சேர்க்கப்படாததுதான். உண்மை யில் சட்டம் ஜனநாயகப்படுத்தப்படாததன் விளைவைத்தான் நீதியின் தள்ளாட்டமாக, பாரபட்சமாக நாம் உணர்கிறோம். சட்ட ஜனநாயகமயமாக்கலுக்காக நீதித் துறைக்கு..
₹190 ₹200
வழக்குரைஞர்கள், முக்கியமாக இளம் வழக்குரைஞர்கள் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் பல்வேறு சட்டப் பிரச்னைகளில் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்வதோடு, சமூகத்தைப் பற்றிய பார்வையையும் விரிவாக்கிக் கொள்ளலாம்...
₹190 ₹200
நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில் சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்பட..
₹214 ₹225