-5 %
அரசியலமைப்பு சட்டமும் மதச்சார்பின்மையும்
நீதிநாயகம் து.அரிபரந்தாமன் (ஆசிரியர்)
Categories:
Politics| அரசியல்
₹52
₹55
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நீதிபதி சிவராஜ் பாட்டில் அறக்கட்டளை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘அரசியலமைப்புச் சட்டமும் மதச்சார்பின்மையும்’, ‘தகுதி படைத்த மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியை எட்டாக்கனியாக்கும் நீட்’, ‘ஒப்பந்தத் தொழிலாளர் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்’, ‘இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் - சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்’, ‘அன்று அம்பேத்கர் இன்று மனுஷ்யபுத்திரன்’ என்ற உள்ளடக்கம் கொண்ட அவரது படைப்புகளின் தொகுப்புதான் இந்த நூல். இதில், மதச்சார்பின்மை குறித்த பேச்சுதான் மிக விரிவானது.
மதச்சார்பின்மை வலுவடையாமல் போனதற்குக் காரணம் என்ன என்பதை, “இதுவரை தலித் மக்களை ஒடுக்கி, மதச்சிறுபான்மையினரை ஓரங்கட்டியே வந்த மத ரீதியான சக்திகள், மேலாதிக்கம் செலுத்திவரும் சாதிகள் ஆகியவற்றை எதிர்த்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசுகள் போராடத் தவறின. மதச்சார்பற்ற சக்திகளின் பின்னடைவுக்கு இதுதான் மிகப்பெரிய ஒரேயொரு காரணமாக அமைந்திருந்தது” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறார்.
இந்திய அரசியலுக்குள், அரசியல் நிர்ணய சபைக்குள், சட்டத்துக்குள் இருக்கும் மதச்சார்பு வேர்களை வெளியில் கொண்டுவந்து வீசுகிறார் என்பதை வைத்துப் பார்க்கும்போது, அரிபரந்தாமனின் நீதிப்பயணம் தொய்வின்றி தொடர்கிறது என்பது தெரிகிறது. அதற்கான ஆதாரமே, இந்தப் புத்தகம்.
Book Details | |
Book Title | அரசியலமைப்பு சட்டமும் மதச்சார்பின்மையும் (Arasiyalamaippu sattamum mathasarpinmaiyum) |
Author | நீதிநாயகம் து.அரிபரந்தாமன் |
Publisher | நீதிபதி சிவராஜ் பாட்டில் அறக்கட்டளை (Justice sivaraj patil Foundation) |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | அரசியல், சட்டம் |