Menu
Your Cart

காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை

காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை
காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை

கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது மருமகன் பெரிய உடையணரும் தலைமறைவாயிருந்த விருப்பாச்சிக் காடுகளிலிருந்து பினாங்கு, சுமத்ரா வரையில் இந்த வரலாற்றுச் சுவடுகளைப் பின்தொடர்ந்து பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.


1801- இல் சுமார் ஆறு மாதங்கள் நடந்த காளையார்கோவில் போரை நாட்டின் முதல் சுதந்திரப் போர் என நிறுவ முடிந்தாலும்கூட இன்னமும் உரிய இடம் அல்லது பெருமை அதற்கு வழங்கப்படவில்லை. 

காளையார்கோவில் போரை முன்வைத்து ஆசிரியர் எழுதிய "1801' நாவலின் தொடர்ச்சி அல்லது அதன் ஒரு பகுதிதான் "காலா பாணி' நாவல் என்று கொள்ளலாம். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மன்னரும், நாட்டின் முதல் புரட்சித் திலகம் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையணத் தேவன் மற்றும் அவர் கூட்டாளிகள் 72 பேர் நாடு கடத்தப்பட்ட கதைதான் இந்த நாவல்.

பெரிய உடையணத் தேவன் கைது செய்யப்பட்டதில் தொடங்கி, திருமயம் கோட்டையிலிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லப்பட்டு, துறைமுகத்தில் கப்பலேற்றி, பினாங்கிற்குக் கடத்தப்பட்டு, அங்கே அவர்கள் மாண்ட துயரக் கதையைச் சிறப்பாக எழுதிச் செல்கிறார் ஆசிரியர். வேங்கை உடையணத் தேவனும் குழுவும் நாடு கடத்தப்பட, அவருடைய உறவுகள் படும்பாடுகள் எழுதப்பட்டுள்ள விதம் சிறப்பு.

கடலுக்கு அப்பால் நடந்த கதையின் சில பகுதிகள் மட்டும் வரலாறும் புனைவுமாகக் கலந்திருக்கிறது. நாவலாசிரியர் நாவல் சம்பந்தப்பட்ட வரலாற்றிடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்து நாவலைச் செறிவூட்டியுள்ளார்.

உடையணத் தேவனின் மனைவியும் மற்றொரு வீரமங்கையுமான மருதாத்தாள் பாத்திரத்தை மேலும் புனைவுகள் சேர்த்து, நாவலின் செயற்படு நாயகியாக வலுப்படுத்தியிருக்கலாம். எந்தவொரு வரலாறு என்றாலும் நெடுகிலும் மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ்களும் கிறிஸ்டியானாக்களும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

நாவல் செல்லும் தடத்திலேயே அன்றைய தமிழகத்தின், தமிழர்களின் வாழ்க்கைச் சூழல், பிரிட்டிஷாரின் நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகள் என பிறவற்றையும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.


source: https://www.dinamani.com/specials/nool-aragam/2021/jan/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-3542068.html 


Book Details
Book Title காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை (Kaalaa paani)
Author டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப (Taaktar Mu.Raajendhiran, I.Aa.Pa)
ISBN 9789382810704
Publisher அகநி பதிப்பகம் (Agani Publications)
Pages 645
Published On Dec 2022
Year 2020
Edition 03
Format Hard Bound
Category Novel | நாவல், History | வரலாறு, Award Winning Books | விருது பெற்ற நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

டாக்டர் மு.ராஜேந்திரன் IAS, இந்நூலின் வழி எடுத்துரைத்துள்ள அறிய செய்திகள் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் புதிய பரிணாமத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. வரலாற்று அடிப்படையிலோ அல்லது ஆய்வின் அடிப்படையிலோ குற்றம் இல்லாத வகையில் திகழும் வரலாற்று நூல் இது. பயனுடைய நூல். - டாக்டர்.இரா நாகசாமி..
₹475 ₹500
உலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். திருக்குறளில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சட்டக் கருத்துக்காளை ஆழ்ந்த புலமையுடன் ஆய்ந்து, தற்கால நடைமுறையுடன் இந்நூலின் ஒப்பாய்வு செய்துள்ளார்..
₹209 ₹220
இந்திய சுதந்திர வரலாற்றில், விடுதலை எழுச்சிக்கான முதல் குரல் தென்னகத்தில்தான் ஒலித்தது. ஒலிக்கச் செய்தவர்கள் பூலித்தேவர், திப்பு சுல்தான், கட்டபொம்மன், தூந்தாஜி வாக், மருதுபாண்டியர், ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர், தீரன் தின்னமலை உள்ளிட்ட போராளிகளே. தென் இந்தியாவின் போராளிகளை ஒன்று திரட்டி ..
₹475 ₹500
பாதாளிநாம் எல்லோரும் நம்முடைய பழைய நினைவுகளைச் சுமந்து கொண்டுதான் நம்முடைய கிராமங்களை நோக்கிப் போகிறோம்.ஆனால்,நம் நினைவுகளின் பசுமையை நம்முடைய கிராமங்களிலேயே நம்மால் காண முடியவில்லை.நாம் நினைத்துக் கொண்டுச் செல்லும் கிராமம் அங்கு இருப்பதில்லை.நம்முடைய நினைவுகளாய் இருக்கும் தெருக்களின் முகங்கள் மாறிவ..
₹285 ₹300