-5 %
Out Of Stock
உயிர்ச்சொல்
கபிலன் வைரமுத்து (ஆசிரியர்)
₹143
₹150
- Year: 2011
- ISBN: 9788184932072
- Page: 200
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது. பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது. உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது. கபிலன்-வைரமுத்து என்ற இளம் தமிழ் எழுத்தாளரின் புதிய பரிணாமம் இப்படைப்பு. இலக்கிய வாசலுக்கு ஒரு வாழ்க்கை வந்து விழும்போது எழுத்தாளனுக்குப் புதிய உத்வேகம் கிடைக்கிறது என்பது கபிலனின் கருத்து. கவிதை, சிறுகதை, நாவல் என்று பல இலக்கிய வடிவங்களைக் கையாண்டவர் என்பதாலும், நவீன சமூகத்தின் பல்வேறு அடையாளங்களைப் பதிவு செய்யும் தாகம் கொண்டவர் என்பதாலும் கபிலன்வைரமுத்துவைப் பன்முக எழுத்தாளர் என்று அழுத்திச் சொல்லலாம். ‘உயிர்ச்சொல்’, கபிலன்வைரமுத்துவின் இரண்டாவது நாவல். நாவலுக்கென்றே பிரத்தியேகமாக எழுதி இசையமைக்கப்பட்ட பாடல், குறுந்தட்டு வடிவில் புத்தகத்துடன். “நாவலுக்குப் பாடல் என்பது புதுமை. நல்ல வரவேற்பைப் பெறும். பாடலில் கலந்திருக்கும் ஒருவிதமான ஏக்கம், உள்மனத்தை என்னவோ செய்கிறது.”-இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்
Book Details | |
Book Title | உயிர்ச்சொல் (Uyirsol) |
Author | கபிலன் வைரமுத்து (Kabilan Vairamuthu) |
ISBN | 9788184932072 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 200 |
Published On | Nov 2010 |
Year | 2011 |
Category | Novel | நாவல் |