
-5 %
கடல் - சமஸ்
சமஸ் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 2
- Year: 2024
- Page: 200
- Language: தமிழ்
- Publisher: இந்து தமிழ் திசை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தி இந்து நாளிதழில் "நீர் நிலம் வனம்" என்ற பெயரில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. மீனவர்கள் கடலில் மட்டும் வாழ்பவர்கள் அல்ல. அவர்கள் வாழ்க்கை கடலுக்கும் கரைக்கும் இடையில் ஊடாடிக்கொண்டிருக்கிறது. கடலுக்குள்ளும் வெளியிலும் ஆழமும் அடர்த்தியும் கொண்டு விரிந்து கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வை உள்ளது உள்ளபடி வெளிக்காட்டும் முயற்சியே இந்நூல். சமஸின் இந்தக் கட்டுரைகள் கடல் சார் வாழ்க்கை பற்றியும் கடலை நம்பி வாழ்வும் மனிதர்கள் பற்றியும் கரிசனத்தோடு பேசுகின்றன. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களின் வரலாற்றை இவை சொல்கின்றன. பல ஊர்களையும் நிலங்களையும் மலைகளையும் கடல்வெளிகளையும் அவை சார்ந்த வாழ்க்கையையும் இந்த நூலின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதில் வரும் மக்கள் மொழி மிகவும் முக்கியமானது. ஒரு மகத்தான இலக்கியவாதி தனது படைப்புகளின் மூலம் தன் மொழிக்குச் செய்யக் கூடிய பங்களிப்பை இந்த நூலின் மனிதர்கள் செய்கிறார்கள். அவர்களின் பேச்சுமொழியை ஒரு தேர்ந்த எழுத்துக் கலைஞனின் நுட்பத்துடன் சமஸ் பதிவுசெய்திருக்கிறார். வெகுஜனப் பத்திரிகைக் கட்டுரைகள் எவ்வித ஆழமோ, ஆய்வோ இன்றி எழுதப்படுபவை என்னும் பொதுவான குற்றச்சாட்டுக்கு மாறாக ஆழமாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை.
Book Details | |
Book Title | கடல் - சமஸ் (Kadal) |
Author | சமஸ் (Samas) |
Publisher | இந்து தமிழ் திசை (Hindu Thamizh Thisai) |
Pages | 200 |
Year | 2024 |
Edition | 2 |
Category | Essay | கட்டுரை |