-5 %
கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார்
ஶ்ரீநேசன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789395560061
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தன்னறம் நூல்வெளி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்த நவீன வாழ்வுதரும் நம்பிக்கைகளுடன் மட்டும் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல், முன்பிருந்த தன் வாழ்வை அதன் உலகை அதன் வாழ்வியல் காட்சிகளை அற்புதமான கவிதைகளாக்கியுள்ளார். பிறரது கவனத்தை ஈர்ப்பதற்கும், ரசனைகளை வெளிப்படுத்தவும், மேதமையைக் காட்டவும், வாழ்க்கைக்காக பயன்படுத்திக்கொள்ளவும் தெரிந்தவனுக்கு இக்கவிதைகளை எழுதத் தெரிந்திருக்காது. பெரும் காலவோட்டத்தில் தன்னைக் கரைத்துக்கொள்ளாமல் ‘தொடர்ந்து எழுது’ என்ற புத்திமதிகளுக்கும் செவிசாய்க்காமல் தோன்றியபோது எழுதிக்கொண்டிருகிறார். இத்தன்மை கொண்டவர்கள் பெரும் படைப்பாக்கங்களுக்குப் பிறகும் அதிலிருந்து விலகி பிறிதொரு உலகிலும், தம்மை ஒப்புக்கொடுத்திருப்பார்கள். ஸ்ரீநேசன் அவர்களில் ஒருவர்”
~ கண்டராதித்தன்
தொகுப்பாசிரியராக எழுத்தாளர் ஜீ.முருகன் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தொகுத்த கவிஞர் ஸ்ரீநேசன் கவிதைகள் அடங்கிய புதியநூல் ‘கடவுள் எப்படி ஜெயிக்கிறார்’ தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியீடு கொள்கிறது. வருகிற ஜனவரி புத்தகக் கண்காட்சியில் இத்தொகுப்பு வெளியாகிறது. இக்கவிதைகளின் முந்தைய பதிப்புகளை வெளியிட்ட எல்லா பதிப்பகத் தோழமைகளுக்கும் இக்கணத்தில் நன்றியுரைக்கிறோம். தமிழின் சிறந்த மூத்த கவிஞர்களில் ஒருவராகிய ஸ்ரீநேசனின் கவிதைகளை வெளியிடுவதில் நிறைமகிழ்வு அடைகிறோம். ‘இயற்கை இறைக்கு நிகரானது’ என்கிற புள்ளியை நோக்கி வாசகமனதை அழைத்துப்போகும் இவருடைய கவிதைகள் நம் அகத்திற்கு அணுக்கமான கண்டடைதல்கள் எனலாம்.
Book Details | |
Book Title | கடவுள் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் (Kadavul Mattum Eppadi Jeyikirar) |
Author | ஶ்ரீநேசன் |
ISBN | 9789395560061 |
Publisher | தன்னறம் நூல்வெளி (Thannaram Publications) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Poetry | கவிதை, 2023 New Arrivals |