-10 %
கடவுள் பிசாசு நிலம்
அகரமுதல்வன் (ஆசிரியர்)
₹387
₹430
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789394265486
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விகடன் பிரசுரம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஈழ மண் பல யுத்தங்களையும் வலிகளையும் கண்ணீரையும் கண்டு, கலங்கி நிற்கிறது. அங்கு வாழ்ந்த, வாழும் தமிழ் மக்கள் போரின் வலிகளையும் அது தந்த வடுக்களையும் தாங்கி ஒரு சூன்யமான வாழ்க்கையை அனுபவித்தவர்கள். எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடேயே ஈழத் தமிழர்கள் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்கள். இலங்கையில் அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் தொடங்கி இறுதிப் போர் தொடங்கும் வரையிலான காலகட்டம்தான் இந்தக் கதையின் களம். ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து அந்த காலகட்டத்தில் நடந்ததை, பல பாத்திரங்களுடன் பயணித்தபடியே செல்கிறது இந்தப் புனைவு. உண்மையும் கற்பனையும் கலந்து, போராளிகளின் வாழ்க்கையையும் அரசின் தந்திரங்களையும் அந்தச் சிறுவன்வழியே கதை நகர்கிறது. ஜூனியர் விகடன் இதழில் வெளிவந்த `கடவுள் பிசாசு நிலம்' தொடரின் தொகுப்பு நூல் இது. இறுதிப் போர் தொடங்கியபோது ஈழத் தமிழர்களின் மனநிலை, போராளிகளின் முடிவு, அரசு செய்த சூழ்ச்சி என அத்தனையையும் பல கதாபாத்திரங்கள் வழியே சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். கடவுளும் பிசாசும் வாழும் நிலத்துக்குள் வாருங்கள்!
Book Details | |
Book Title | கடவுள் பிசாசு நிலம் (kadavul pisasu nilam) |
Author | அகரமுதல்வன் (agara muthalvan) |
ISBN | 978-93-94265-48-6 |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Eezham | ஈழம், Literature | இலக்கியம், 2023 New Arrivals |