Hot
நீர் எழுத்து
₹300
- Edition: 1
- Year: 2019
- ISBN: 9788194181071
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காடோடி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நம் மூச்சு என்பதும் நீரே!
நிலமும் நீரே! நிலத்தில் வாழும் உயிரும் நீரே! தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%. பாலில் 87% முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் சின்னஞ்சிறு மண்புழுவின் உடல் 80% நீர். நீர்நில வாழ்வியான தவளை என்பது 78% நீர், கடலில் மிதக்கும் ஜெல்லி மீன் 95% நீர்.
நம் உடல் கூட 65% நீர்தான். இது மனிதருக்கு மனிதர் வேறுபடலாம். ஒல்லியான மனிதர் தன் உடல் எடையில் 70% நீராகக் கொண்டிருக்கலாம். அதேவேளை பெண் தன்னுடலில் சேமிப்பான கொழுப்பின் காரணமாக உடல் எடையில் 52% நீரை மட்டுமே கொண்டிருக்கக்கூடும். உடல் பல வழிகளில் நீரைப் பெறுகிறது. அருந்துவதன் வழி 47%, உணவிலிருந்து பெறுவது 39%, செல்லுலர் ரெஸ்பிரேசன் எனும் வேதியியல் செயற்பாட்டின் வழியும் 14% நீர் உருவாக்கப்படுகிறது.
இதையெல்லாம் சிந்திக்கும் நம் மூளை என்பது 74.5% நீர். உடலில் ஓடும் குருதியில் 83% நீர். நுரையீரல் என்பது 70% நீர்; சிறுநீரகம் 82.7% நீர்; தசை என்பது 75.6% நீர். ஒருவரை எலும்பும் தோலுமாய் இருக்கிறார் எனக் கேலி செய்வோமே, அத்தோலில் இருப்பது 64% நீர்; எலும்பும் கூட 22% நீரே. நம் உடலிலுள்ள டிஎன்ஏ மூலக்கூறும் நீராலானது. பல நூறு கோடிக்கணக்கான நீர் மூலக்கூறுகள் அதில் உள்ளன. அதன் சுழல் ஏணி வடிவத்தைக்கூட நீரே தீர்மானிக்கிறது. நீர் இல்லாவிடில் நம் டிஎன்ஏவே அழிந்துவிடும்.
நம் உடல் நீரில் 1% குறைந்தால் அதற்குப் பெயர் தாகம். அதுவே 12% குறைந்தால் அதன் பெயர் மரணம்.
இவ்வளவு ஏன்? நீரில்லாது நம் மூச்சுக்கூட வெளிவராது. நம் ஒருநாள் மூச்சில் வெளியாவது ஒரு கோப்பை நீர்.
புத்தகத்திலிருந்து சில வரிகள்....
Book Details | |
Book Title | நீர் எழுத்து (Neer ezhuthu) |
Author | நக்கீரன் (Nakeeran) |
Illustrator | சந்தோஷ் நாராயணன் (santhosh narayanan) |
ISBN | 9788194181071 |
Publisher | காடோடி பதிப்பகம் (Kadodi Publication) |
Published On | Nov 2019 |
Year | 2019 |
Edition | 1 |
Format | Paper Back |