Menu
Your Cart

அர்த்தமுள்ள இந்துமதம்

அர்த்தமுள்ள இந்துமதம்
அர்த்தமுள்ள இந்துமதம்
-5 %
அர்த்தமுள்ள இந்துமதம்
அர்த்தமுள்ள இந்துமதம்
அர்த்தமுள்ள இந்துமதம்
கண்ணதாசன் (ஆசிரியர்)
₹618
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அர்த்தமுள்ள இந்துமதம் - கவிஞர்.கண்ணதாசன்:(தொகுப்பு)

 புத்தகத்தில் அருமையான  தத்துவங்கள்:
  •  எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன்., அதனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுரை கூறும் அருகதை எனக்கு உண்டு" என்று ஆரம்பிக்கிறார்.
  • 'இவர் கொஞ்சம் பேச மாட்டாரா?' என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.
  • பேசத்தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.
  • கடலின் ஆழமான பகுதிய்ல் அலை இருக்காது.
  • வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப்பாருங்கள் பயங்கரக்காற்று அடிக்கும்.
  • வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட கார் மேகத்தின் வேகம் குறைவு.
  • நாய் ஓடுவதை விட யானை நடப்பதில், வேகம் அதிகம்.
  • சலனமற்ற மெளனம் பல அர்த்தங்களைக் கொண்டது. 
  • பேசாமல் இருப்பவனே பெரிய விஷயத்தைச் சொல்பவன், பேசிக்கொண்டிருப்பவன் ஞானக்கிறுக்கன்.
  • ஆரோக்கியத்திற்கு மெளனம் மிக அவசியம்.
  • தவம் புரிகின்றவன் 'ஓம் நமசிவாய" என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.
அருமையான வரிகள்:

          1. மரணமோ, சரித்திரத்தில் மகத்த்தான மணி மண்டபமாக்க் கருதப்படுகிறது.உயர்ந்தோர்,நல்லோர்,பெரியோர்கள்.ஞானிகள்-

        2.  இந்த வார்த்தைகளில் பாரத்த்தன் முழு வரலாறுகளும் அடங்கிக்கிடக்கின்றன.

          3.அந்த விளக்குகள் ஒளியைத் தந்தன; நாம் வாழ்க்கைக் கண்டு கொண்டோம்.

          4.அந்தக் கைகாட்டிகள் பாதையைக் காட்டின; நாம் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தோம்.

        5. அந்த மேகங்கள் மழை பொழிந்தன; நாம் நமது நிலங்களைச் செழுமையாக்கிக்கொண்டோம்.

கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை குறிப்பு :
  • பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி 
  • பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
  • மரபு - தன வணிகர்
  • இயற்பெயர் - முத்தையா
  • உடன்பிறந்தோர் - எண்மர்
  • கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
  • உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
  • 1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
  • 1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
  • 1944 - முதற் கவிதை - முதற் கவிதை
  • 1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
  • 1949 சண்டமாருதம் ஆசிரியர்
  • 1949 திரைப்படத் துறை பயிற்சி
  • 1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி, 
  • பாடல் கலங்காதேதிருமனமே
  • 1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
  • 1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
  • 1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
  • 1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
  • 1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை, 
  • 1956 முல்லை இலக்கிய மாத இதழ்
  • 1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
  • 1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
  • 1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
  • 1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ் துவக்கம்
  • புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம், 
  • தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
  • 1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
  • மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
  • 1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
  • 1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
  • 1971, 1975 - மலேஷியா பயணம்
  • 1978 - அரசவைக் கவிஞர்
  • 1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
  • 1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
  • 1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
  • இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
  • புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி
  • குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

Book Details
Book Title அர்த்தமுள்ள இந்துமதம் (arthamulla-indhumadham)
Author கண்ணதாசன் (Kannadasan)
Publisher கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam)
Pages 359
Year 2019
Edition 8
Format Hard Bound
Category Spirituality | ஆன்மீகம், Hindu | இந்து மதம், Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெண்பா இயற்றுவது எப்படி? நல்ல கேள்வி.. முதல்ல சில விசயம் சொல்றேன் அப்புறம் வெண்பா பற்றி போகலாம். தமிழ் உலகின் ஆக சிறந்த மொழி. காரணம் அத்தனை நெடிய பாரம்பரியம். கொண்டது. உலகில் எத்தனையோ கலாச்சாரங்கள் பழக்கத்தின் வழியாகவும். நடைமுறைபடுத்தியதன் வழியாகவும் தொடர்ச்சியாக வந்திருந்தன. ஆனால் தமிழ் ஒன்று மட்ட..
₹190 ₹200