-5 %
Out Of Stock
கனல்வாய் எயிற்றுக் காரைக்காற்பேய்: காரைக்கால் அம்மையார் - கலைவரலாற்று ஆய்வு
முனைவர் தேன்மொழி (ஆசிரியர்)
₹713
₹750
- Edition: 1
- Year: 2018
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மணற்கேணி பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரான்மலைக்குடைவரைக் கோயில் தூண் ஒன்றில் இடம்பெற்றிருந்த ஒரு சிற்பமே இந்நூல் உருவாக்கத்திற்குக் காரணமாய் அமைந்தது. வளைந்த முதுகு, கையில் ஊன்றிய கோல், தேவையற்றது என்பதைபோல் ஆடை, சரிந்துகிடக்கும் இடை, விலா, மார்பு எலும்புகள், திரங்கி சரிந்த கொங்கைகள் என்றிருந்தது அந்த சிற்பம். மணற்கேணி ஆசிரியர் முனைவர். ரவிக்குமார் தனது வலைத்தளத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு அதைக் காரைக்கால் அம்மையார் எனத் தெரிவித்திருந்தார். பெரும்பாலானோர் அச்சிற்பத்தை ஔவையாராக அடையாளப்படுத்தியதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று ஔவையாரும் அவரது முதுமையும் குறித்துப் பொதுவெளியில் மிகப்பெரிய அறிமுகம் இருந்தது. அதே சமயம், காரைக்கால் அம்மையார் குறித்து நாம் பெரிதாக அறிந்திருக்கவில்லை என்பது ஒன்று. மற்றொன்று சிவகங்கை பிரான்மலை என்பது பாரிவள்ளல் வாழ்ந்த பறம்பு மலை என்பதாக நம்பப்பட்டு வருவதால், அம்முதிய வடிவத்தை ஔவையாரோடு தொடர்புபடுத்திக் கொள்வது எல்லோருக்கும் எளிதாக இருந்தது. இதில் முதலாவதாக உணரப்பட்ட காரணமே காரைக்காலம்மையார் தொடர்பான இந்நூல் உருவாவதற்குக் காரணமாக அமைந்தது.
Book Details | |
Book Title | கனல்வாய் எயிற்றுக் காரைக்காற்பேய்: காரைக்கால் அம்மையார் - கலைவரலாற்று ஆய்வு (karaikkal_ammaiyar) |
Author | முனைவர் தேன்மொழி |
Publisher | மணற்கேணி பதிப்பகம் (Manarkeni Publications) |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | ஆய்வு அறிக்கை | Study Report, Archeology | தொல்லியல், Essay | கட்டுரை |