கார்ல் மார்க்ஸ்: ஓர் ஆய்வு நோக்கு (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
₹325
- Edition: 1
- Year: 2021
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எர்னெஸ்ட் பிளாக் (1885-1977) ஒரு ஜெர்மானிய யூத அறிஞர்.ஒரு ரயில்வே அதிகாரியின் மகனாகப் பிறந்தவர்.பள்ளிப்பருவத்திலேயே மார்க்சியத்தின் மீது ஆர்வம் கொண்டவர்.தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். இளமையிலேயே வால்டேர் பெஞ்சமின், ஜியார்ஜ் லுக்காச், பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், தியோடர் அடோர்னோ போன்ற கனதியான மார்க்சிய நண்பர்களைக் கொண்டிருந்தார்.
1921 ல் எர்னெஸ்ட் பிளாக் 'தாமஸ் முன்த்சர்: புரட்சியின் இறையியலாளர்' என்ற நூலை எழுதினார். தாமஸ் முன்த்சர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓர் இறையியலாளர்.ஒன்றுபட்ட கிறித்தவ மதத்திலிருந்து சீர்திருத்தக் கிறித்தவம் என்ற ஒரு பிரிவு தோன்றுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர்.எளிய கிறித்தவ விவசாயிகளைத் திரட்டி கத்தோலிக்கக் கிறித்தவத்தின் நிலவுடைமை அமைப்புகளுக்கும், நடைமுறைகளுக்கும் எதிராக போராடியவர்
விவசாயிகளை ஆயுதமேந்திப் போராடச் செய்தவர்.இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் தங்கியிருந்த நாட்களில் "நம்பிக்கையின் கோட்பாடு"(The Principle of Hope) என்ற மிகப்பெரிய நூலை எழுதினார். சுமார் 1500 பக்கங்களையும் மூன்று பாகங்களையும் கொண்ட நூல் அது. எர்னெஸ்ட் பிளாக்கின் தத்துவ நிலைப்பாடுகளை முழுவதும் எடுத்துரைக்கும் நூல் என்று இது கருதப்படுகிறது.
Book Details | |
Book Title | கார்ல் மார்க்ஸ்: ஓர் ஆய்வு நோக்கு (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) (karl-marx-oar-aaivu-nokku) |
Author | எர்னெஸ்ட் பிளாக் (Ernest Pilaak) |
Translator | பொன்.சின்னத்தம்பி முருகேசன் (Pon.Sinnaththampi Murukesan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Marxism | மார்க்சியம், Essay | கட்டுரை |