
-5 %
நல்லவண்ணம் வாழலாம்
சுகி சிவம் (ஆசிரியர்)
₹76
₹80
- Year: 2017
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: கற்பகம் புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அமைதியும் , ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த சானமும், இளந்தென்றல் தழுவிச் செல்வது போன்ற இனிய பேச்சும், ஒழுக்க ஓட்பமும் ஒருங்கே நிறைந்தவர் திரு . சுகி. சிவம் . அவருடைய அறிவார்ந்த கருத்துக் கருவூலமே இவ்வரிய நூல். சில சொற்கள் மங்களகரமானவை. மந்திரத் தன்மை மிக்கவை. திரும்பத் திரும்ப சொல்லுபவர்கள் வாழ்வை உயர்த்தும் வலிமை உடையவை. இவையே மறைமொழி. இப்படிப்பட்ட ஓர் உயர் மறைமொழி ' நல்ல வண்ணம் வாழலாம் ' என்பது . தமிழ் மறை அருளிய ஞானசம்பந்தப் பெருமான் திருவாக்கு அது. அதனைத் தலைப்பாக்க் கொண்ட இந்தப் புத்தகமும் ஒரு வகையில் வேதம்தான். உபநியாசகர்கள், சமய சொற்பொழிவாளர்கள் என்கிற மரபில் பூத்த மலர்தான் நான். ஆனால் அவர்களில் இருந்து பல வகையில் நான் வேறுபட்டு நிற்கிறவன். காரணம் , புத்தக அறிதலை விட உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுக்கிறவன். மோனமாகிறபோது ரமணராகவும், கர்ஜிக்கிறபோது விவேகானந்தராகவும் இருப்பது என் இயல்பாகிவிட்டது. வித்தியாசமான இந்த இயல்புகாரணமாக மரபுகளை மதித்தாலும் மூடப்பழமையைச் சமயம் எனக்கூற என்னால் முடியவில்லை. உண்மைகளை உள்ளவாறு தேடி உறுதியாக அறிவிக்கவே எனக்குப் பிடிக்கிறது. சமயச் சொற்பொழிவாளர்கள் பலரும் கடவுளை மையப்படுத்தியே பேசி வரும்போது மனிதனை மையப்படுத்தியே என்னால் சிந்திக்க முடிகிறது. என் சிந்தனையின் செவிலித்தாய்களைக, என்னை எடுத்து வளர்க்கும் வாசகர்கட்கும் - என் எழுத்தால் வளரும் வாசகர்கட்கும் என்றும் என் நன்றி. இரண்டாயிரத்து பத்தில் இந்தியா உலகத்தின் உன்னத வல்லரசாக ஆக வேண்டும் என்கிற நல்லெண்ணத்தைப் பெறுங்கள். பிறருக்கும் சொல்லுங்கள் . உலகம் உயரும்
Book Details | |
Book Title | நல்லவண்ணம் வாழலாம் (Nallavannam Vaazhalaam) |
Author | சுகி சிவம் (Suki Sivam) |
Publisher | கற்பகம் புத்தகாலயம் (karpagam puthagalayam) |
Pages | 112 |
Year | 2017 |