- Edition: 3
- Year: 2017
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
கருக்கு:
செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.காரணம் நாம் சரித்திரத்தை வெகுவேகமாக மறப்பவர்கள்.குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கை சித்திரங்களையும்,பெண்கள் வாழ்க்கை போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. அப்படி எளிதாக்கி கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. மனத்தைக் குத்துபவைகளை அவை இல்லாதவை போல பாவனை செய்து கொண்டு இருப்பவர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்க,அவர்களை முட்டி முட்டித் தொல்லை தர,அவர்களின் தடித்து போன தோல்களை கீறிவிட ‘கருக்கு’ தேவைப்படுகிரது.உருவகமாகவும் புத்தகமாகவும்.
இது ஒரு அனுபவக்கதை பாவப்பட்ட மக்கள் மோட்சத்திற்று செல்ல வழிகாட்டுபவர்களுடன் ஒரு தலித் மகள் வாழ்ந்த கதை சொந்த
மண்ணில்தான் தலித்துகளுக்கு அவமானம் என்றில்லை.
ஆண்டவனின் பிரதிநிதிகளிடமும் அதுதான் கதி.
இதில் இந்த மதம் அந்த மதம் என்ற வேறுபாடில்லை. இதுதான் இன்றும் இருக்கிற கொடுமை. இந்தக் கொடுமையை எதிர்த்த போராட்டமே
“ கருக்கு “ ஆக உருவெடுத்துள்ளது.
பாசாங்குத் தனமில்லாத புதிய எழுத்து நடை மட்டுமல்ல துணிச்சலான நடையும்கூட கருக்கு முதலில்
வெளிவந்தபோது பல்வேறு தளங்களில் அது சலனம் ஏற்படுத்தியது. அதில் சொல்லப்பட்ட விசயங்கள், சொல்லப்பட்ட முறை சொல்வதற்காக்
கையாண்ட உத்தி, பயன்படுத்திய மொழி, சொல்லாடல்கள் எல்லாமே பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாயின.
சாதியின் பிடிப்பில் சிக்கிச் சீரழிந்து சிதைக்கப்பட்டவர்களுக்கும் விளிம்பு நிலைக்கு விரட்டப்பட்டவர்களுக்கும் தங்களது வாழ்க்கைப்
பாதையில் மறுபயணிப்புச் செய்யவும். உளச் சிக்கலை உடைத்தெறிந்துவிட்டு தன்மானத்துடன் தலைநிமிர்ந்து சுதந்திரமாக வாழவும்
ஒரு உத்வேகத்தை அளித்தது சுருக்கு.
மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட பல விசயங்களை மறுகவனிப்புக்கு உட்படுத்தியதும், ஒதுக்கப்பட்ட
ஒரங்கட்டப்பட்ட பல விசயங்களை உன்னதமான கொண்டாட்டங்களுக்கு உகந்தவைகளாக ஆக்கியதும் கருக்கின்
Book Details | |
Book Title | கருக்கு (Karukku) |
Author | பாமா (Bama) |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 112 |
Year | 2017 |
Edition | 3 |
Format | Paper Back |