Menu
Your Cart

கயர்லாஞ்சி: படுகொலையும் அநீதியும்

கயர்லாஞ்சி: படுகொலையும் அநீதியும்
-5 %
கயர்லாஞ்சி: படுகொலையும் அநீதியும்
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்துப் பண்பாடு, முழு அண்டமும் ஒரு குடும்பம் என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே சமூகத்தை எண்ணற்ற சாதிகளாகத் துண்டாக்கியுள்ளது. இந்தப் பண்பாடு அகிம்சையை விழுமியமாகக் கற்பித்துக் கொண்டே, கருவி ஏந்திய கடவுள்களின் வழிபாட்டின் மூலமாகத் தன்னைத்தான் ஒழுங்கு செய்து கொள்ளும் வன்முறையை அன்றாட வாழ்வில் உறுதி செய்கிறது. நாம் கயர்லாஞ்சியை விரும்பத்தக்கதொரு நிகழ்வாக, ஒரு பிறழ்ச்சியாக, ஏதாவது ஒரு குழப்பமான நீதிமன்றத்தில் ஒரு மறந்து போன வழக்காக நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சாதிய மரம் புறம் தந்துள்ள இந்த விசித்திரக் கனியை உலகம் அறிய வேண்டும். அந்த மரம் தனது இலைகளிலும் வேரிலும் குருதி தோய்ந்து இருப்பதாகும். இந்நூல் எரியும் தசைகளின் திடீர் வாடையை உலகுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது ஒரு மாறுபட்ட, கசப்பான வழித் தடத்திற்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. கயர்லாஞ்சியில் இந்திய இந்துமத ஜாதிய சமூகம் நிகழ்த்தியப் பச்சைப் படுகொலையை உலக அரங்கில் விவாதம் எழுப்பச் செய்த தனித்துவமிக்க ஆவணப் பிரதி இது. - இந்நூலின் ஆங்கில பதிப்பிற்கான முன்னுரையில் ஆனந்த் டெல்டும்டே
Book Details
Book Title கயர்லாஞ்சி: படுகொலையும் அநீதியும் (khairlanji-padukolaiyum-aneethiyum)
Author ஆனந்த் தெல்தும்ப்டே (Aananth Theldhumpte)
Translator ச. சிவலிங்கம் (S. Sivalingam)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான ..
₹333 ₹350
இந்து ஆட்சி ஒரு மெய்யான நிலவரமாகுமானால், அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய துன்பமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்துக்கள் என்ன உறுதி கூறினாலும், உண்மையில் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்துக்கு இந்து மதம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்து ஆட்சி, என்ன விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும்..
₹143 ₹150