-10 %
Out Of Stock
கதை வடிவில் காமத்துப்பால்
கலை இலக்கியா (ஆசிரியர்)
₹108
₹120
- Publisher: விகடன் பிரசுரம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாலியல் கல்வி போதிக்கப்படுவது மட்டுமே, பாலியல் குற்றங்களை தடுக்கும் என்று அறிஞர்கள் பலர் கூறிவருகின்றனர். ஆனால், நம் மூத்தகுடியான அய்யன் திருவள்ளுவர் காமத்துப்பாலில் களவியலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போதித்துள்ளார். திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் புகழ்பெற்ற இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படும் திருக்குறளை முப்பாலாக பிரித்தளித்துள்ளார் வள்ளுவர் பெருமான். கடைசிப்பாலாகிய காமத்துப்பாலில், களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. முப்பாலின் ஒரு பாலான காமத்துப்பால் இன்றைய அறிஞர்களால் ‘இன்பத்துப்பால்’ என்றே பெரும்பான்மையாக அழைக்கப்படுகிறது. ஆண், பெண் இடையே இன்பம் எப்படி உச்சம் அடைகிறது என்பதை வள்ளுவரின் இரண்டடியை நமக்குக் கதை வடிவில் தந்து அசத்தியிருக்கிறார் நூலாசிரியர் கலை இலக்கியா. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281 காதலுக்கு உள்ள குணம் கள்ளுக்குக்கூட இல்லை. காதல் தன்னை நினைத்தாலே மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டாலே போதும். மகிழ்ச்சியைத் தருகிறது. கள்ளு இப்படி செய்யுமா? உண்டால்தானே? ஆக காதல் என்பது கள்ளை விட கொடிய போதை வாய்ந்தது என்பதை அய்யன் அன்றே சொல்லிவிட்டார். இந்த குறள் விளக்கத்தை கதை வடிவில் நாம் படிக்கும் போது அர்த்தங்கள் எளிதில் புரிபடுகின்றன. இதுபோன்று காமத்துப்பாலை கதைவடிவில் எளிய மொழியில் உருவாக்கி அளித்துள்ளார் நூலாசிரியர்.
Book Details | |
Book Title | கதை வடிவில் காமத்துப்பால் (Kathai Vadivil Kamathupal) |
Author | கலை இலக்கியா (Kalai Ilakiya) |
Publisher | விகடன் பிரசுரம் (Vikatan Prasuram) |