- Year: 2014
- ISBN: 9788123425573
- Page: 438
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கற்றாழை
மாணிக்கம், அளம், கீ தாரி போன்ற நாவல்கள் மூலம் உழைக்கும் பெண்களின் உலகை அதன் பூரண வலிகளுடன் காட்டியுள்ள சு.தமிழ்ச்செல்வியின் நான்காவது நாவல் ‘கற்றாழை’. எத்தகைய வறட்சியிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு உயிர்த்திருக்கும் கற்றாழை பெண்ணின் உருவகம்.
சிற்றூர் பின்னணி கொண்ட மணிமேகலை என்னும் சாதாரணப் பெண்ணின் வாழ்வில் நடக்கும் மூர்க்கமான சம்பவங்கள் அவளைத் தொழில் நகரமான திருப்பூருக்கு விரட்டுகிறது. அவளை ஒத்த, கைவிடப்பட்ட பெண்களின் புகலிடமாய் திகழும் அப் பெருநகர் மறைத்து வைத்திருக்கும் ஒளி குன்றாத புன்னகையை, ஈரம் காயாத கண்ணீரை இப்புனைவில் தரிசிக்க முடியும். சுயசார்பும் சுயமதிப்பும் உடைய இவ்வுழைக்கும் பெண்கள் ஒரு கம்யூனாக இணைந்து வாழும் மாதிரி உலகைப் புனைவாக்கி இருப்பதன் மூலம் சு.தமிழ்ச்செல்வி பெண்ணின் நம்பிக்கைகளுக்கு மீண்டுமொரு முறை புத்துணர்வளிக்கிறார்.
Book Details | |
Book Title | கற்றாழை (Katrazhai) |
Author | சு.தமிழ்ச்செல்வி (S. Tamilselvi) |
ISBN | 9788123425573 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 438 |
Year | 2014 |
Format | Paper Back |
Category | Novel | நாவல் |