- Edition: 1
- Year: 2017
- ISBN: 9789382394259
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: க்ரியா வெளியீடு
காவிரிக் கரையில் அப்போது...
கட்டுரைகளில் இருப்பவை அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரிக் கரைப் பண்பாட்டின் விவரங்கள். அன்றைய எழுத்துலகில் உருவான காவியப் புனைவுகள் விலக்கிவைத்திருந்த பஞ்சைச் சங்கதிகள் இவை.
இவற்றைக் கழித்து அந்தப் பண்பாட்டை முழுமையாக அறிய முடியாது. தமிழ்ச் சமுதாயம் இவற்றை மறக்க இருக்கும் நேரத்தில், ‘இப்படியெல்லாம் இருந்தது அப்போது’ என்று துவங்கும் விவரிப்புக் குரலின் தவிப்போடு, காவிரிப் படுகையின் வித்தார மொழியிலேயே பேசும் அனுபவச் சித்திரங்கள் இந்தக் கட்டுரைகள். அவர் காலத்து நினைவுகள் என்று விட்டேற்றியாக விமர்சிக்கும்படி கட்டுரைகளின் ஆசிரியர் இவற்றை விட்டுவிடவில்லை.
அன்றைய நினைவுகள் இன்றைய நிலவரத்தை விளித்து நடத்தும் செரிவான உரையாடலாகக் கட்டுரைகளை அமைத்திருக்கிறார் ஆசிரியர். காவியப் புனைவுகளை எழுதியவர்களோடு, எழுதியவற்றை அப்போது வாசித்தவர்களும் சமமாகப் பொறுப்பு ஏற்க வேண்டிய தமிழ்-எழுத்துலகக் குறைபாடு ஒன்றைக் களையும் முயற்சி இத்தொகுப்பு.
Book Details | |
Book Title | காவிரிக் கரையில் அப்போது... (Kaveri karaiyil appothu) |
Author | தங்க.ஜெயராமன் (Thanga.Jeyaraaman) |
ISBN | 9789382394259 |
Publisher | க்ரியா வெளியீடு (Crea Publication) |
Pages | 144 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |