Menu
Your Cart

கோடாவிற்காகக் காத்திருத்தல்

கோடாவிற்காகக் காத்திருத்தல்
-5 %
கோடாவிற்காகக் காத்திருத்தல்
₹133
₹140
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கோடாவிற்காகக் காத்திருத்தல்

1969ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சாமுவேல் பெக்கெட்டுக்கு, உலகப் புகழைப் பெற்றுத்தந்த நாடகம் ‘கோடாவிற்காகக் காத்திருத்தல்’. இந்நாடகம் வெளியானது தொடங்கி இன்று வரைக்கும் உலகின் சிறந்த 100 புத்தகங்கள் பட்டியலில் இருந்து வருகிறது. சாமுவேல் பெக்கட் படைத்துள்ள பாத்திரங்களின் அக்கறை சாதாரணமானது அல்ல; தத்துவார்த்தமானது. அவர்களுக்கு இந்த உலகம் அடிப்படையில் அபத்தமானதாகத் தெரிகிறது. இதற்கு, வேறு ஏதாவது அர்த்தம் இருப்பதற்கான தடயம் கிடைக்குமா எனத் தேடுகின்றனர். இந்நாடகத்திலும் விளாடிமர் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுகிறான். ஆனால் அது அவனுக்குத் தென்படவில்லை. விளாடிமர் உட்பட இதில் வரும் பாத்திரங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் எல்லாமே அகப் பயணங்களாகும். விளாடிமர், முழங்கால்களைக் கைகளால் கட்டி குத்துக்காலிட்டு உட்கார்ந்தபடி காட்சியளிக்கும் விதம் மிகவும் உள்ளர்த்தம் கொண்டதாக இருக்கிறது. இது தாயின் கருப்பையில் வளரும் குழந்தையின் நிலையை மிகவும் ஒத்திருக்கிறது. ஆக, பெக்கட்டின் பாத்திரங்களை, அனைத்துக்குமான ஆரம்ப நிலையை ஆராயப் போகின்ற குறியீடாகவும் பொருள் கொள்ளலாம். பெக்கட்டின் தத்துவார்த்த அக்கறைகளுக்கு நனவோடை உத்தி மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அதற்கு இந்நாடகமே சிறந்த உதாரணம்.




Book Details
Book Title கோடாவிற்காகக் காத்திருத்தல் (Kodavirkaga Kathiruthal)
Author சாமுவேல் பெக்கட் (samuel beckett)
Publisher கயல் கவின் வெளியீடு (Kayal Kavin Veliyeedu)
Pages 168
Year 2013
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha