-5 %
கேஃபேப் ரஸ்லிங் நாடகம்
நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி திரிபுரா (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2017
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அந்தாழை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அவனுடைய வீடு பகல் பொழுதில் ஆள் இல்லாமல்தான் இருக்கும் (எங்கள் குழுவில் பெரும்பாலான பைன்களின் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருந்தார்கள்). சிறிது நேரம் அன்றைய விளையாட்டு குறித்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது கேப்டன் டீவியை ஆன் செய்தான். செம்மையாக ஒரு விளையாட்டு இன்னும் சற்று நேரத்தில் போடுவார்கள் என்று பெரிய அறிமுகமெல்லாம் கொடுத்துக்கொண்டே. எங்கள் குழுவில் அவன் வீட்டில் மாத்திரமே அப்போது கேபிள் தொடர்பு இருந்தது. அவனுடைய மாமா அந்த பகுதியின் கேபிள் ஆபரேட்டராக இருந்த காரணத்தால் அவன் வீட்டில் அது இலவசமாக இருந்தது.
அறிமுகமென்றால் எங்கள் குழுவே வாயை பிளக்கும் அறிமுகம். அவனுக்கு ஏழு உயிர் இருக்கும், அவனை சாகடிக்கவே முடியாது, எவ்வளவு அடித்தாலும் அப்படியே எழுந்து உட்கார்ந்துகொள்வான், அவன் ஒரு பேய் இப்படித்தான் இருந்தது அந்த விளையாட்டு குறித்த அவனுடைய அறிமுகம். எங்கள் குழுவில் ஒரு சில பையன்களுக்கு அந்த விளையாட்டு முன்பே அறிமுகமாகியிருந்தது. அவர்களும் அவனுடன் சேர்ந்துகொண்டு அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று வெளுத்துக்கட்டினார்கள். ஏழு உயிர், போகும் வரும் என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் (அப்போதே நமக்கு பெரும் தலைகளின் எழுத்துகள் அறிமுகமாகிவிட்டதன் காரணமாக. பெரும் தலைகள் என்றால் கதை, கவிதைகளில் சல்லியடிக்கும் பெரும் தலைகள் அல்ல. நான்-பிக்சன் எழுத்துகளின் பெரும் தலைகள். எனது வாசிப்பு அனுபவ சுய வரலாற்றுக்கான இடம் இதுவல்ல என்பதால் இவ்வளவிற்கு நிறுத்திக்கொள்வோம்) ஒருவித ஆர்வம் தொற்றிக்கொண்டது.
அப்போது திங்கள் மதியம் மூன்று மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அந்த விளையாட்டை ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். விளையாட்டு தொடங்கியது. ஏற்கனவே அதை பின் தொடர்ந்துகொண்டிருந்த நண்பர்கள் மற்ற எங்களுக்கு அதில் வந்துகொண்டிருந்தவர்களை பற்றி விளக்க குறிப்புகள் கொடுக்கத் தொடங்கினார்கள். அதுவெல்லாம் என்னை கவரவில்லை ஆனால் அந்த விளையாட்டு நடத்தப்பட்ட விதமும், அதில் வந்த விளையாட்டு வீரர்களின் தோற்றமும், நாலா பக்கமும் சிகப்பு நிற கையிறுகள் கட்டிய மேடையில் அவர்கள் நிகழ்த்தி காட்டிய ஸ்டன்ட்களும் என்னை அப்படியே அள்ளி உள்ளே போட்டுக்கொண்டுவிட்டது.
ஒவ்வொரு வீரர் அறிமுகமாகும்போதும் அவருக்கு என்று தனித்த இசை ஒலிக்க விடப்பட்ட முறையும், சில வீரர்களின் அறிமுக இசையை கேட்ட மாத்திரத்தில் அரங்கில் இருந்த ஆயிரக் கணக்கான மக்கள் ஒருமித்த குரலில் உற்சாகத்தில் துள்ளி குதித்ததும், செதுக்கியதைப் போன்ற அந்த வீரர்களின் உடல் அமைப்பும் முற்றிலும் புதுவிதமான பார்வை அனுபவத்தை பார்த்த நொடியிலேயே ஏற்படுத்திவிட்டது. மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தையும் கூடவே ஏற்படுத்திவிட்டது. இரண்டு மணி நேரம் முழுதும் அமைதியாக உட்கார்ந்து பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்த நான் செய்த முதல் காரியம் என் தாயாரிடம் கெஞ்சி கூத்தாடி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்கான கேபிள் ஒளிபரப்பை வீட்டு தொலைக்காட்சியில் வர வரவழைத்ததுதான்.
Book Details | |
Book Title | கேஃபேப் ரஸ்லிங் நாடகம் (Kayfabe wrestling nadagam) |
Author | நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி திரிபுரா |
Publisher | அந்தாழை (anthaazhai) |
Published On | Jan 2017 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | நாடகம் |