Menu
Your Cart

அமைதிப் புயல்: ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

அமைதிப் புயல்: ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
-5 %
அமைதிப் புயல்: ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
₹185
₹195
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மனித நாகரிக வளர்ச்சிக்கு கிரேக்கம் அளித்த பங்களிப்புக்கு சற்றும் குறைவானதல்ல இந்திய மறுமலர்ச்சிக்கு வங்காளம் அளித்த பங்களிப்பு. வங்காளத்துக்குப் பெருமை சேர்த்தவர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். சில சமயம் ரவீந்திரநாத் தாகூரின் பெயர் வித்யாசாகருக்கு மாற்றாக முன்மொழியப் படுவதுண்டு. ஆனால், தாகூரோ 'வித்யாசாகரைநான் நம்மில் முதல் மனிதராகக் கருதுகிறேன்' என்று அதிசயித்து அவரது சாதனைகளைக் கொண்டாடியிருக்கிறார். வங்காளியர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போது கூட ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்தாறு முறையாவது வித்யாசாகரின் பெயரைப் பெருமை பொங்க உச்சரித்து விடுகிறார்கள். வித்யாசாகரின் வாழ்க்கையிலிருந்து பல சம்பவங்களை மீண்டும் மீண்டும் பூரிப்புடன் நினைவுகூர்கிறார்கள். இந்திய சுதந்தரப் போராட்டக் காலகட்டத்தில் போராட்டம், பொதுப்பணி, எழுத்து, கல்வி என்று இவரைப் போல் பரந்துபட்டு இயங்கியவர்கள் வெகு சிலரே. அவரது அத்தனை சாதனைகளையும் விஞ்சி நிற்பவை அவரது அமைதியும் கருணையும் ஒப்பற்ற மனித நேயமும்தாம். வித்யாசாகரின் அசாதாரணமான வாழ்க்கை வரலாறை சுவைபட விவரிக்கும் நூலாசிரியர் சு. கிருஷ்ணமூர்த்தி, ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளரும் கூட. 'குருதிப் புனல்' ஆங்கில மொழிபெயர்ப்புக்காக இவருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. மேலும், திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்பட பல பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.
Book Details
Book Title அமைதிப் புயல்: ஈஸ்வர சந்திர வித்யாசாகர் (Amaidhippuyal: Eswara Chandra Vidyasagar)
Author சு.கிருஷ்ணமூர்த்தி (S.Krishnamoorthi)
ISBN 9788183681384
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 227
Published On May 2007
Year 2022
Edition 03
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை ..
₹181 ₹190
மார்க்சியப் பார்வையில் ரவீந்திரநாத் தாகூர்..
₹57 ₹60