Menu
Your Cart

எஞ்சும் சொற்கள்

எஞ்சும் சொற்கள்
-5 %
எஞ்சும் சொற்கள்
சுரேஷ் பிரதீப் (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
உடைமைகள் அனைத்தையும் கடற்சீற்றத்தில் இழந்து உயிர்தப்பி கரையில் அமர்ந்திருக்கும் ஒரு வணிகனைப் போல கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன். அலைகள் கொண்டு வந்து கரைசேர்க்கும் உடைமைகளின் மிச்சங்கள் போல இக்கதைகள் என்னிடம் வந்து சேர்கின்றன. பயன்படுத்த முடியாதவை விற்க முடியாதவை. முன்பும் இவை என்னுடன் இருந்தன. நான் இவற்றுக்கு ஒரு பொருளை கற்பித்து வைத்திருந்தேன். ஆனால் ஒரு சீற்றத்தில் சிக்கித் தப்பியபின் இப்பொருட்கள் முழுமையாக வேறுவகையாக பொருள்படுகின்றன. முன்பிருந்தது போல அல்லாமல் கற்றுக் கொண்டவற்றின் பெற்றவற்றின் இழந்தவற்றின் சாட்சியங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திரும்பி வந்திருக்கும் இக்கதைகள் ஒவ்வொன்றும் எனக்கு கற்பித்தன. என்னை எனக்குக் காட்டித் தந்தன. இக்கதைகளுக்கென இவ்வருடத்தில் வந்த வாசக எதிர்வினைகள் மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது இக்கதைகள் பலருடன் உரையாடி இருப்பதை உணர முடிகிறது. அத்தகையதொரு உரையாடலின் முழுவடிவமாகவே இத்தொகுப்பினை நான் காண்கிறேன்.
Book Details
Book Title எஞ்சும் சொற்கள் (Enjum Sorkal)
Author சுரேஷ் பிரதீப் (Suresh Piradheep)
ISBN 9789386737731
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 152
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தொடர்ச்சியான சமூக ஊடுகலப்பும் குறையும் இடைவெளிகளும் குனிந்தோ அண்ணாந்தோ பார்த்து நாம் ‘பிறன்’என விலக்கி வைத்திருந்தவர்களை, கொஞ்ச நேரத்திற்கோ நீண்ட நாட்களுக்கோ நம் பயண வாகனத்தில் ஏற்றியாகவேண்டிய அவசியத்தைக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தச் சூழலில் அந்த நெருக்கம் நம் மனதில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ சலன..
₹119 ₹125
நவீன சமூக மாற்றத்திற்கான அறைகூவல்கள் தொடங்கி நூறாண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்றின் அத்தனை ஊடுவழிகளையும் கண்டு சிந்தித்து முன்செல்வது எனும் பெரும் செயல் முன் அஞ்சி நிற்கின்றன இன்றைய நவீன மனங்கள். தடுமாற்றமும் நற்குணங்களும் கொண்ட ஒருவன், அத்தடுமாற்றங்களின் சுவடற்ற ஒருவனின் முன் நாவலுக்குள் திகைத்து நிற..
₹114 ₹120
‘உடனிருப்பவன்’ தொகுப்பின் கதைகளைத் தொகுத்தபோது இறுக்கமான மனநிலையிலிருந்து வெளியேறியதான, என் ஆழத்தின் பல சிடுக்குகளைச் சொல்லிவிட்டதான ஓர் எடையின்மை மனதில் தோன்றியது. ஆனால் இத்தொகுப்பின் கதைகளை விட்டு வெளியேறுவது உண்மையில் துயரம் தருவதாக இருக்கிறது. நானே இக்கதைகளின் சிறு தருணங்களை எடுத்து வைத்து அவ்வப..
₹171 ₹180