-5 %
மக்களோடு நான்
எஸ்.எஸ்.சிவசங்கர் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2015
- ISBN: 9789384149222
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தொடர்ந்து ஒருவர் மக்களுக்காக மக்களைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரம் இந்நூல். தன்னைச் சுற்றி நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளையும் கொள்கைக் கண்கொண்டு பார்க்கத் தெரிந்தவராகத் தோழர் சிவசங்கர் எனக்குத் தென்படுகிறார். அவருக்குள் இருக்கும் கலைஞனை, அவருக்குள் இருக்கும் இசை ரசிகனை, அவருக்குள் இருக்கும் இலக்கியவாதியை, அவருக்குள் இருக்கும் புரட்சிக்காரனை, அவருக்குள் இருக்கும் கருணையாளனை இந்தப் பதிவுகள் நமக்குக் காட்டுகின்றன. - கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதி அரசியல்வாதி என்றால் அவர்தம் எழுத்துகள் தன்னைப்பற்றித்தாமே இருக்கவேண்டும்? ஆனால், இங்கே, அப்படி இல்லை. மேலும், இவர் கட்டுரையைக் கட்டுரையாகவா எழுதுகிறார்? தகவல்களைத் தகவல்களாகவா தருகிறார்? அதற்குள் ஒரு கதை பின்னுகிறார்! கிட்டத்தட்ட அத்தனையும் சிறுகதைகள். பள்ளிக்கூடத்துப் பாடப் புத்தகத்தில் அல்லது அம்புலிமாமாவில் இடம்பெறுமே அப்படியானதொரு கதைகூறல் முறை. - கவிஞர் ராஜசுந்தரராஜன் மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று, அவர்களுக்காகக் குரல் கொடுத்து, அவர்கள் நலனுக்காகச் சிந்தித்து, செயல்படும் ஓர் அபூர்வமான அரசியல்வாதி எஸ்.எஸ். சிவசங்கர். தன்னுடைய உணர்வுகளைச் சுருக்கமாகவும் எளிமையாகவும் அவரால் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது என்பதற்கு இந்தப் பதிவுகள் ஓர் ஆதாரம். ஃபேஸ்புக்கில் எஸ்.எஸ்.சிவசங்கர் எழுதியுள்ள பதிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு இந்நூல்.
Book Details | |
Book Title | மக்களோடு நான் (Makkalodu En Anubavangal) |
Author | எஸ்.எஸ்.சிவசங்கர் (Es.Es.Sivasangar) |
ISBN | 9789384149222 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 0 |
Year | 2015 |