-5 %
Out Of Stock
பணம் பண்டைய ரகசியங்கள்
Suresh Padmanabhan (ஆசிரியர்)
₹57
₹60
- Year: 2012
- ISBN: 9788184934793
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரகசியங்கள் நாளடைவில் திரிந்துபோகின்றன அல்லது மறைந்துபோகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்திய ரகசியங்கள் பலவும் தொலைந்துபோய்விட்டன அல்லது இந்தியர்களாலேயே அவை தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. பணம் பற்றிய மேற்கத்திய உலகின் கருத்துகளும் கோணமும் குறைவுபட்டவை, முழுமையற்றவை. பணம், செல்வம் ஆகியவை பற்றி முழுமையான உயர்தரப் புரிதல் உங்களுக்கு வேண்டும் என்றால், கிழக்கத்தியச் சிந்தனைகளையும் மேற்கத்தியச் சிந்தனைகளையும் நீங்கள் ஒருங்கிணைக்க வேண்டும். இப்போது பணம் பற்றிய முழுமையான புரிதலை நாம் பெறவேண்டிய தருணம் வந்துவிட்டது. பணத்தின்மீது கவனம் செலுத்தினால், அது வளர ஆரம்பிக்கிறது. வாழ்க்கை முழுதுமே நமக்குப் பணத்துக்கான தேவை இருந்து கொண்டே இருக்கிறது. நம்முடைய நலத்துக்காக, பணத்துக்கு நன்றி, அன்பு, மரியாதை ஆகியவற்றைச் செலுத்தவேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்தப் புத்தகம் 10,000 ஆண்டுப் பழமையான இந்தியாவிலிருந்து பணம் பற்றிக் கிடைத்துள்ள ரகசியங்களை தொட்டுப்போகிறது. பணத்தைப் பணப் பெட்டியில் எந்தத் திசையில் வைக்கவேண்டும் என்று சொல்கிறது. சிவப்பு, பச்சை ஆகிய வண்ணங்களின் பொருளைச் சொல்கிறது. பணத்தை அதிகரிக்கும் மூன்று புனிதப் பொருள்களைப் பற்றிச் சொல்கிறது. மந்திர உச்சாடனங்கள், இடத்தைச் சுத்திகரித்தல், பணத்தின் ஆற்றல் ஆகியவை பற்றிச் சொல்கிறது. தினசரி நடவடிக்கைகளுக்குச் சரியான முகூர்த்த நேரம் எது என்பது பற்றிச் சொல்கிறது.
Book Details | |
Book Title | பணம் பண்டைய ரகசியங்கள் (Panam Pandaya Ragasiyangal) |
Author | Suresh Padmanabhan (Suresh Padmanabhan) |
ISBN | 9788184934793 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 80 |
Year | 2012 |