-5 %
Out Of Stock
உறவுகள் மேம்பட
சோம.வள்ளியப்பன் (ஆசிரியர்)
₹181
₹190
- Year: 2008
- ISBN: 9788183688420
- Page: 136
- Language: Tamil
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கட்டுக்கட்டாகப் பணம். கட்டுக்கடங்காத சொத்து. பகட்டான பதவி. மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு இவை மட்டும் போதுமா? நிச்சயமாக இல்லை. எனில், எவையெல்லாம் இருந்தால் சந்தோஷமான வாழ்க்கை சாத்தியம்? அன்பு குறையாமல் உபசரிக்கும் கணவன்/மனைவி. பாசத்தைப் பொழியும் குழந்தைகள். பிரச்னை என்றவுடன் ஓடிஒளியாமல் ஓடிவந்து அரவணைக்கும் உறவுகள். எப்போதுமே ஊக்கத்தை வாரிவழங்கும் நண்பர்கள். மொத்தத்தில் நல்ல மனிதர்கள் கிடைத்துவிட்டால் உங்களைவிட அதிர்ஷ்டசாலி இருக்கமுடியாது. வலை வீசினால் கிடைத்துவிடுவார்களா மனிதர்கள்? கிடைப்பார்கள். ஆனால் அந்த வலை அன்பு, பாசம், கனிவு, பணிவு, நட்பு ஆகியவற்றால் பின்னப்பட்டிருக்கவேண்டும். மௌனத்தைக் கொண்டே உங்கள் நண்பரை சுண்டியிழுத்துவிட முடியும் என்றால் நம்பமுடிகிறதா? சிறு புன்னகை மட்டுமே சிந்தி உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கென்று நட்பு வட்டத்தை உருவாக்கிவிடமுடியும் தெரியுமா? ‘நல்லாயிருக்கீங்களா?’ என்ற ஒற்றை வார்த்தையைக் கொண்டே சொந்தபந்தங்களை எல்லாம் சுவீகரித்துவிடமுடியும் தெரியுமா? மனிதர்களை ஈர்க்கும் வித்தையை நெருக்கமான சம்பவங்கள், அழகான கதைகள், ஆழமான உதாரணங்கள் மூலம் நமக்கு கற்றுத்தருகிறது இந்நூல். மொத்தத்தில் மனிதர்களுடன் பழகும் கலையை அழகு தமிழில் சொல்லித்தருகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன்.
Book Details | |
Book Title | உறவுகள் மேம்பட (Uravugal Membada) |
Author | சோம.வள்ளியப்பன் (Soma Valliappan) |
ISBN | 9788183688420 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 136 |
Published On | Nov 2007 |
Year | 2008 |
Category | சுயமுன்னேற்றம் |