Menu
Your Cart

வெற்றிக்கு ஒரு வரைபடம்

வெற்றிக்கு ஒரு வரைபடம்
-10 %
வெற்றிக்கு ஒரு வரைபடம்
₹270
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

நாம் கற்க விரும்புகிறோம். நம்மிடமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம். தொடர்ந்து மேலே மேலே முன்னேறவும் மகிழ்ச்சியோடு வாழவும் விரும்புகிறோம். இருந்தும், நம் லட்சியம் மாய மானைப் போல் விலகி விலகிச் சென்றுகொண்டே இருக்கிறது. அந்த மாய மானைப் பிடிப்பதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. மாயாவியாக மாறிவிடுங்கள். இந்தப் புத்தகம் அந்த மந்திரத்தை அற்புதமாகச் சொல்லிக்கொடுக்கிறது.

கற்கவேண்டும் என்று விரும்பினால் மட்டும் போதாது; அக்கறையோடும் ஆர்வத்தோடும் எப்படிக் கற்கவேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியம்; ஆனால் அதைவிட முக்கியம் உங்களுக்குள் இருக்கும் திறன்கள் என்னென்ன என்பதைக் கண்டறிவது. மகிழ்ச்சி முக்கியம் ஆனால் எது மகிழ்ச்சி என்பது தெரியவேண்டுமல்லவா?

சுவாரஸ்யமான நடையில், ஏராளமான எடுத்துக்காட்டுகளோடும் குதூகலமூட்டும் சிந்தனை வரைபடங்களோடும் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வை ஆச்சரியமூட்டும் வகையில் மாற்றியமைக்கப் போகிறது. உடற் பயிற்சி தொடங்கி மனப் பயிற்சி வரை; அறிவியல் தொடங்கி தியானம் வரை அனைத்தையும் புதுமையான முறையில் அறிமுகப்படுத்துவதோடு இவற்றைக் கருவிகளாகக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எப்படியெல்லாம் வெல்லலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.

நீங்கள் மேல் படிப்புக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் மாணவரா? வாழ்க்கை மேம்படவேண்டும் என்னும் விருப்பம் கொண்டவரா? உங்கள் மூளையின் ஆற்றலை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள துடிக்கிறீர்களா? கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். படிப்படியாக உங்கள் வாழ்க்கை மாறுவதைக் கண்ணாறக் காணுங்கள்.

“இந்தப் புத்தகம் மூளையைச் சிறந்த முறையில் பயன்படுத்து-வதைப் பற்றியது. இந்தக் கலையை அனைவருமே கற்க விரும்புவர். மூளை எப்படி வேலை செய்கிறது, எந்த விஷயம் மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது, எதனால் அது சோர்ந்து-விடுகிறது என்பது குறித்து விளக்கும் விலை-மதிப்பில்லாத புத்தகம். இது தொழில் நிபுணர்களுக்கும் அத்தியாவசியமான புத்தகம்.”

Book Details
Book Title வெற்றிக்கு ஒரு வரைபடம் (vetrikku-oru-varaippadam)
Author குர்ஷத் பாட்லிவாலா, தினேஷ் கோட்கே
Translator சந்திரசேகரன் கிருஷ்ணன்
ISBN 9788184939897
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Published On Jul 2019
Year 2019
Edition 01
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha