-5 %
கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள்
மு.இராமனாதன் (ஆசிரியர்)
₹276
₹290
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9788196015343
- Page: 232
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வெளியுறவு சார்ந்து தமிழுக்குக் கிடைத்திருக்கும் அருமையான நூல் இது. சர்வதேச உறவுகளைத் தமிழ்ப் பார்வை கொண்டு பார்ப்பது இதன் தனித்துவம். இளையோருக்கு, குறிப்பாகக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல வாசிப்புக்கான நூல் என்பதைத் தாண்டி, வழிகாட்டியாகவும் அமையும். அணிந்துரையில் சமஸ் சீனாவின் வளர்ச்சியும் வறுமை ஒழிப்பும் முன்னுதாரணம் இல்லாதவை. இவை சீனாவின் ஒரு முகம். யதேச்சதிகாரமும் மேலாதிக்கமும் இன்னொரு முகம். இந்த நூலில் இடம்பெறும் கட்டுரைகள் இந்த இரண்டு முகங்களையும் படம்பிடிக்கின்றன. ஹாங்காங்கின் சுயாட்சியையும் தைவானின் எழுச்சியையும் கலங்கிக் கிடக்கும் தென் சீனக் கடலையும் வரலாற்றுக்கு முகம்கொடுக்க மறுக்கும் ஜப்பானையும் கிழக்காசியக் கட்டுரைகள் பேசுகின்றன. அகதிகள் ஆக முடியாத ஈழத் தமிழர்களும், எவராலும் கவனிக்கப்படாத பர்மீயத் தமிழர்களும் நூலில் இடம்பெறுகிறார்கள். உக்ரைன் போரின் நதிமூலமும் இந்திய - சீன எல்லைச் சிக்கலும் விரிவாகப் பேசப்படுகின்றன. ஆஸ்திரேலியாவின் பகல் வெளிச்ச மாற்றமும் அமெரிக்க ஜனநாயகத்தின் போதாமைகளும் டிரம்பிசமும் இன்னும் தமிழில் அதிகம் பேசப்படாத பன்னாட்டுப் பிரச்சினைகள் பலவும் இந்த நூலில் இடம்பெறுகின்றன.
Book Details | |
Book Title | கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் (Kizhakkum merkum) |
Author | மு.இராமனாதன் (Mu.Ramanathan) |
ISBN | 9788196015343 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Pages | 232 |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | International Politics | சர்வதேச அரசியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals |