-5 %
Available
கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின...
எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
₹247
₹260
- Year: 2016
- ISBN: 9788123430881
- Page: 348
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்க்சிய அம்பேத்கரிய பெரியாரியப் பார்வையில் எஸ்.வி.ஆரால் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் குறித்து எழுதப்பெற்ற கலை இலக்கிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. உடல்நிலை பாதிப்புக்குள்ளான போதும் கருத்தியல் தளத்தில் தீவிரமாக இயங்கிவருபவர் எஸ்.வி. ராஜதுரை. மேலை நாட்டுத் தத்துவங்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், சந்தித்த ஆளுமைகள் ஆகியவற்றுடன், முக்கியமான நடப்புகளையும் பத்திரிகைகள் வாயிலாகப் பதிவு செய்துவருபவர். அவரது சமீபத்திய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். 'அங்கக அறிவாளி' எம்.எஸ்.எஸ்.பாண்டியன், குந்தர் கிராஸ், எத்வர்தோ கலியானோ, ஹொஸெ ஸரமாகோ போன்றவர்களின் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் அதே நேரத்தில், திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் வே. ராதாகிருஷ்ணனின் கவிதைத் தொகுப்பு குறித்தும் எஸ்.வி.ஆர்., பேசுவது இந்தப் புத்தகத்தை மேலும் தனித்துவமாக்குகிறது. 'ஒரு சிறந்த புத்தகம் இன்னொரு சிறந்த புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும்' என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் புத்தகத்தின் மூலமாக நாம் வேறு பல புத்தகங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொருவர் வீட்டு நூலகத்திலும் இடம்பெற வேண்டிய சிறந்த புத்தகம் இது!
Book Details | |
Book Title | கூண்டுப் பறவைகள் பறந்தன பாடின... (Koondu Paravaigal Paranthana Paadina) |
Author | எஸ்.வி. ராஜதுரை (S.V. Rajadurai) |
ISBN | 9788123430881 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 348 |
Year | 2016 |