Menu
Your Cart

குளிர்கால இரவில் ஒரு பயணி | If On A Winter's Night A Traveler

குளிர்கால இரவில் ஒரு பயணி | If On A Winter's Night A Traveler
-5 %
குளிர்கால இரவில் ஒரு பயணி | If On A Winter's Night A Traveler
இடாலோ கால்வினோ (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தப் புத்தகத்தின் பக்கங்கள் தேவதை கதைகளுக்கும் யதார்த்தவாத கட்டமைப்பிற்கும் இடையில் பயணம் செய்கின்றன. வாசகர் விரும்பும் எந்த வடிவத்தையும் அவர்களே உருவாக்கம் செய்யலாம். நாவல் அபூரணத்தைப் பற்றிய ஒரு கருத்தை அறிவுறுத்துகிறது. எதையும் ஒருபோதும் முடிக்க முடியாது, கதைகள் முடிவதில்லை. எப்போது தோன்றுகிறதோ அங்கே நிறுத்திக்கொள்கிறோம். அதுபோலவே, இதுதான் சரியானது என்பது நீங்கள் எழுதும் நாவல் மட்டுமன்றி, எழுதக்கூடிய எல்லாவற்றிற்கும் ஒருபோதும் பொருந்தாது. சாதாரண வாசிப்பு வடிவத்திலிருந்து வெளியேற நாவல் முயற்சிக்கவில்லை. எழுத்தாளரால் தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகளின் வரிசைக்கு கட்டுப்பட்டிருந்தாலும், ஒரு மிகை உரை பாணியில் நாவல் அமைந்திருக்கிறது. கால்வினோவின் நோக்கம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? உண்மையில் ஒரு தொடக்கத்தை மட்டுமே கொண்ட ஒரு புத்தகத்தை எழுதுவது - ஏனெனில் வாசிப்பின் ஆரம்ப தருணம் மிகப்பெரிய பதற்றம் மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தும். வாசகரின் ஒட்டுமொத்த கவனமும் அதில் பதிகையில் படிக்கப்படும் நாவல் சாத்தியமுள்ள அனைத்து நாவல்களின் வடிவத்தையும் எடுக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இப்படியாக வாசிப்பு என்பது முதன்முறையாக எழுத்தை (எழுத்தாளரை!) மறுதலிக்கிறது. ஒரு நிபந்தனையற்ற மனநிலையில் மேலாதிக்கத்தை எடுத்துக் கொள்வதை உணரமுடிகிறது. 1979 இல் இந்நாவல் எழுதப்பட்டது, கால்வினோவின் தலைசிறந்த படைப்பாக கருதப்படுகிறது. தமிழ் இலக்கியம் தொடாத உயரங்களை உணர்த்தும் வகையில் தமிழ் மொழிபெயர்ப்புகள் வருவது மகிழ்ச்சி. - சரவணன் மாணிக்கவாசகம்
Book Details
Book Title குளிர்கால இரவில் ஒரு பயணி | If On A Winter's Night A Traveler (Kulirkala iravil oru payani)
Author இடாலோ கால்வினோ
Translator சா.தேவதாஸ் (S. Devadas)
ISBN 978-93-92543-38-8
Publisher தமிழ்வெளி பதிப்பகம் (Tamizhveli Publications)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’..
₹333 ₹350
இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹304 ₹320
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹95 ₹100
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹190 ₹200