Menu
Your Cart

நகரப் பாடகன்

நகரப் பாடகன்
-5 %
நகரப் பாடகன்
குமாரநந்தன் (ஆசிரியர்)
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புதிய தலைமுறைச் சிறுகதையாளர்களில் கவனம் கொள்ளப்பட வேண்டியவர்களும் பேசப்பட வேண்டியவர்களுமானவர்களில் ஒருவர் குமாரநந்தன். அவர் கதைகள் ஆரவாரமற்றவை; ஆனால் அடியோட்டங்கள் நிரம்பியவை. எதார்த்தமான நிகழ்வைச் சித்திக்கும்போதே அதற்குள்ளிருக்கும் இன்னொரு எதார்த்தத்தை முன்வைக்க அவர் முனைகிறார். ஒன்று நடைமுறை; மற்றது அதன்மீதான அலசல். இந்தப் பகுப்பாய்வைக் கனவுகளின் வழியாகக் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் கனவே நடைமுறையாகிறது. அந்தக் கணத்தில் விசித்திரமான விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த விளைவுகள்தாம் அவர் கதைகள். இந்தக் கதைகளில் குடும்பத்தின் வன்முறையும் காமத்தின் வீச்சும் துரோகத்தின் சமாளிப்பும் வன்மக் கொலையின் நிர்த்தாட்சண்யமும் பேசப்படுகின்றன. சமூக நியதிகளும் ஒழுக்க மதிப்பீடுகளும் உடைத்து வார்க்கப்படுகின்றன. மனிதர்கள், சன்மார்க்கர்களா துன்மார்க்கர்களா? இரண்டும் இல்லை; இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள்; நம்மைப் போன்றவர்கள். அன்றாட ஒப்பனையிலிருக்கும் நமது அறியப்படாத இன்னொரு முகத்தைக் கொண்டிருப்பவர்கள் என்கின்றன குமாரநந்தன் கதைகள்.
Book Details
Book Title நகரப் பாடகன் (Nagara Paadagan)
Author குமாரநந்தன் (Kumarananthan)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 0
Year 2018

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இயல்பான சித்தரிப்புமொழியும் தாண்டித் தாண்டிச் செல்கிற வேகமான அளவான எள்ளலும் பொருத்தமான உரையாடல் மொழியும் குமாரநந்தனின் சிறுகதைகளின் வலிமையான அம்சங்கள். கிராமங்களும் நகரங்களும் கதைகளுக்குரிய பின்னணிகளாக மாறிமாறி அமைக்கப்பட்டிருந்தாலும் மனித மனத்தில் சூட்சுமத்தை உணரவும் உணர்த்தவுமான ஆர்வமும் வேகமும் எ..
₹119 ₹125
குமாரநந்தன் கதைகள் தத்துவங்களாலும் கடவுள்களாலும் கைவிடப்பட்ட அல்லது தத்துவங்களிலிருந்தும் கடவுள்களிடமிருந்தும் விடுதலை பெற்றுக்கொண்ட இடத்தில் பிறக்கின்றன. வாழ்வில் சாத்தியமுள்ள வெவ்வேறு நிகழ்தகவுகளால் உருவாகும் சம்பவங்களைக் கதாபாத்திரங்களின் அருகருகே வைக்கும்போது ஏற்படும் மரணத்துக்கு நெருக்கமான அல்ல..
₹323 ₹340