Menu
Your Cart

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சி

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சி
-5 %
கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சி
பா.இரவிக்குமார் (ஆசிரியர்)
₹166
₹175
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சி

நம்மைச் சுற்றி நிகழும் அரசியல், சமூக, பண்பாட்டு நடப்புகள் யாவற்றையும் சனநாயகப் பார்வை கொண்டு, ஆழ்ந்து ஊடுருவி ஆராய்ந்து அலசுவதில், ஆதாரங்களைத் திரட்டி அஞ்சாது உரைப்பதில், நேர்மை தவறாத நெஞ்சுறுதிமிக்கவர் தோழர் ரவிக்குமார். தன்னையோ, தனது பிற அடையாளங்களையோ முன்னிறுத்தி, உள்நோக்கத்தோடு எந்த ஒன்றின் மீதும் அவர் தனது கருத்துகளை முன்வைப்பதில்லை. தலித் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர், மகளிர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் உரிமைகளும் நலன்களுமே அவரது செயற்பாட்டுக்கான களமாகும். புரட்சியாளர் அம்பேத்கர், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் சிந்தனைகளும் போராட்டங்களுமே அவரது செயல்வீரியத்துக்கான அடியுரமாகும்.

*

இத்தொகுப்பில் ரவிக்குமார், தமிழகம் மற்றும் இந்திய அளவிலான பல்வேறு சிக்கல்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் விவாதிக்கிறார். குறிப்பாக, இந்த மண்ணில் திட்டமிட்டே விதைக்கப்பட்டுவரும் வகுப்புவாதவெறியை அல்லது சிறுபான்மையினருக்கும் தலித்துகளுக்கும் எதிரான வெறுப்பை, ஆதாயநோக்கிலான பிற்போக்கு அரசியலைத் தோலுரிக்கிறார். 2019-இல் பாரதிய சனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமேயானால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை முற்றிலும் சிதைத்து, சமூகநீதியை, சனநாயகத்தை, சமத்துவத்தை ஆழக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள் என்று மதச் சார்பற்ற - சனநாயக - முற்போக்கு சக்திகளை எச்சரிக்கிறார்!

- எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Book Details
Book Title கும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு: தலித் நோக்கில் பாஜக ஆட்சி (Kumbalatchiyilirundhu kodungonmaikku : Dalit nokkil ba.ja.ka aatchi)
Author பா.இரவிக்குமார் (Paa.Iravikkumaar)
ISBN 9788184938104
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 184
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கைரேகைக் கொடியில் கனவுப்பூஒரு சொல்லை அடைவதென்பது பிழைப்பின் உயிரை அடைதல் ஆகும். ஒரு சொல்லுக்காகக் காத்திருத்தல் என்பது இறப்புக்கும் பிறப்புக்குமான இடைவெளியில் நிரம்பிக்கிடப்பது. இத்தொகுப்பின் சிறப்புகளில் ஒன்று கவிதை சரியான இடத்தில் தொடங்குவதும் முறையான இடத்தில் முடிவதுமாகும். குருத்து இலையில் தொடங்..
₹76 ₹80
மிதக்கும் உலகம் ஜப்பானியக் கவிதைகள்: மர அச்சு ஓவியங்களுடன்..
₹333 ₹350