Menu
Your Cart

குன்றா வளம்

குன்றா வளம்
-5 %
குன்றா வளம்
நிர்மல் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே பேசுகிறது இந்நூல். "ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான். அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான்" என்று 'ஹெட்போன்' மூலமாகப் பாட்டு கேட்டுக்கொண்டே ஆறுவழிச் சாலையில் பயணிக்கிறவர்கள், அந்தச் சாலைகளுக்காக அழிக்கப்பட்ட மரங்கள், கொல்லப்பட்ட அபூர்வ உயிரினங்கள், பல்லுயிர்ப்பெருக்கத்தின் மரணம் பற்றி சிந்திக்க வாய்ப்பில்லை. இப்படிச் சிந்திப்பதால் அதி விரைவுச் சாலைகளை அமைக்கக்கூடாது என்று சொல்லவும் முடியாது. பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்கள் உருவாக்கிய உற்பத்தி முறைகளால் இந்தப் பூமிக்கும், இயற்கைக்கும் எவ்வாறெல்லாம் கேடுகள் ஏற்பட்டுள்ளன? அந்தக் கேடுகளை சரிசெய்ய மனித இனம் எவ்வாறெல்லாம் தன்னுடைய உற்பத்தி முறையை சீர்படுத்திக்கொண்டே வந்துள்ளது என்பதில் தொடங்கி, ‘Sustainability’ எனப்படும் நிலையான, நீடித்த வளர்ச்சியைப் பெறுவதற்கு உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். Sustainability, சூழலியல் அக்கறை போன்றவற்றை பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான செயலாகவே பார்க்கப்பட்டு வருவதற்கு மாற்றாக குன்றா வளர்ச்சி என பேசப்படும் sustainability என்பது தொழிற் வளர்ச்சியின் அடுத்த படிநிலை என மிக இயல்பாகவும் சுருக்கமாகவும் சொல்கிறது 'குன்றா வளம்'.
Book Details
Book Title குன்றா வளம் (Kundra Valam)
Author நிர்மல்
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Science | அறிவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக இருப்பதற்கான எல்லாவிதமான காரணங்கள் இருந்தும் கூட, சில நாடுகள் மட்டும் உலக வரைபடத்திலிருந்து காணாமல் ப..
₹133 ₹140
'இந்தப் பூமி எப்போது உருவானது? எப்படி உருவானது?' என்பது பற்றியும், 'பூமியின் இயற்கை வரலாறு கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?' என்பது பற்றியும் மிகத் தெளிவாக, அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் விளக்கிச் சொல்கிற 'நிலமும் பொழுதும்' என்கிற இந்தப் புத்தகம் அச்சுறுத்தும் பண்டிதர் நடையில் இல்லாமலும், வாசகனை ம..
₹247 ₹260
நூலகங்களுக்குச் சென்று நூல்களைப் புரட்டுகையில், கடற்கரை சென்று கடலில் கால்களை நனைக்கையில், அலுவலகங்கள் கடைகள் சென்று அவரவர் பணிகளை முடிக்கையில், என்றேனும் இந்தச் செயல்பாடுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு சாத்தியமாகுமா என சிந்தித்து இருப்போமா? படிகளில் பாய்ந்தேறும் நாம் முதுமையில் மாற்றுத்திறனாளிகளாகக் கூட..
₹228 ₹240